மங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பெங்களூரு:மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை பெற்றது. புகைப்படங்கள் தௌிவாக உள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

வண்ணப் புகைப்படங்கள்:

செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காக விண்ணில் வெற்றி்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாயின் மேற்பரப்பை காட்டும் வகையிலான 5 போட்டோக்களை, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. இந்த படங்கள் தௌிவாக உள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்கள்யானின் படங்களை இஸ்ரோ பேஸ்புக் மூலம் வௌியிட்டுள்ளது.



மோடி பார்வையிட்டார்:

மங்கள்யான் வெற்றிகரமாக எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ள செவ்வாய் கோள் புகைப்படங்களை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் கோட்டீஸவர ராவ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், பிரதமர் மோடியிடம் வழங்கினர். அவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை பாராட்டினார்.

முதல் படம்:

செவ்வாய் கிரகத்தி்ன் மேல்பரப்பை மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. செவ்வாயின் மேற்பரப்பு குறித்த அறிவியல் ஆய்விற்கு தேவையான வகையில் படங்களை எடுக்கும் திறன் இந்த கேமராவிற்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கிட்டத்தட்ட 7300 கி.மீ., தொலைவில் இருந்து இந்த படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.

Post a Comment

0 Comments