உச்ச நீதிமன்றத்தின் 42ஆவது தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து (63) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது, "நீதித்துறையை மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான துணிச்சலையும், நம்பிக்கையையும் நான் பெற நாட்டு மக்கள் ஆசிர்வதிக்க வேண்டும்' என்று எச்.எல்.தத்து கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், வெங்கய்ய நாயுடு, அனந்த் குமார், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து சனிக்கிழமை ஓய்வுபெற்ற ஆர்.எம்.லோதா, உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார் கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 14 மாத காலம் பதவி வகிக்கவுள்ள எச்.எல்.தத்து, 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இவர், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு: கர்நாடக மாநிலத்தில் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பிறந்த எச்.எல்.தத்து, 1975ஆம் ஆண்டு பெங்களூருவில் வழக்குரைஞர் தொழிலை தொடங்கினார்.விற்பனை வரித் துறை, வரிமான வரித் துறை சார்பில் அரசு வழக்குரைஞராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 1983ஆம் ஆண்டு ஆஜரானார்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2007ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். பின்னர் கேரள உயர் நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக எச்.எல். தத்து 2008ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார்.

4 Comments
Good Morning Mr.Alan,Munu Muru, Venkat, Mr, RED FIRE....
ReplyDeletewe are all above 90 candidates. When we attended the first C.V. the below 90 people are quiet. They didnt expect that the announcement of our C.M. after the notification of the TET 2013. Nobody expect this. This is a pleasant shock to them. But it is a great shock to all the above 90 candidates. After the examination approximately one year how much strain we have.... waiting for the result... waiting for the C.V.announcement....waiting for the appointment order.....then shock news...appeal to the court...waiting for the judgement.....Government decision......Government officers playing dramas.....Each and everybody comments in the website. Daily 4 to 5 hours spent with the mobile phone watching make the eyes getting problem.....and atlast the Government decided after judgement from Madurai High Court in a fast track manner given appointment order to the 5% relaxation candidates.. How much painful these are!!!
We are not against social justice. They can give 5% relaxation. But not for this exam. Government must follow the notifications. After 2013 TET they can implement the 5% relaxation.. Most of the 5% relaxation candidates also understood this. They are also said that,""""This is Government decision only. So you must question theGovernement.. But as a human being we can not miss the opportunity what we have now!!!"""".
This is the fact. Please understand Mr. Santhosh SIR!!!...
If we go to supreme court definitely all the above 90 candidates will win the case. Hence Our AMMA should decide to release the second list and fill up the post only all the above 90 candidates.. This is justice.....
போடா டுபுக்கு
DeleteHi sir useful information....
ReplyDeleteவழக்கு பற்றிய நிலைகளை தெரிந்துகொள்ள கீழ்கண்ட் பிளாக்கில் இனையவும்.
ReplyDeletehttp://www.unselectedteachers.blogspot.in/?m=1
Delete
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..