வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் - தினகரன்

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஆசிரியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற் றும் சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் ஒப்படை க்க முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கோயம்பேடு விளையாட்டு நகரம் எதிரில் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சசிகலா(35), என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான தகுதி தேர்வு அனுப்பப்பட்டது. அதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோ�ர் எழுதியுள்ளனர். அவர்களில் 17,500 பட்டதாரி ஆசிரியர்களும், 11,000 இடை நிலை ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பின்னர் இட ஒதுக்கீடு அடிப்படையில் 5 சதவிகித மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டது. அதனால் கூடுதலாக 58,000 பேர் தகுதி பெற்றனர்.
பின்னர் அரசு தகுதி தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களும், மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற மதிப்பெண்கள் 40 சதவிகிதமும், அடங்கிய வெயிட்டேஜ் முறையை அரசு அறிவித்தது.

இதனால் சில வருடங்களுக்கு முன் பயின்றவர்கள் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுவதாக கூறி வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர், அவர்கள் கோயம்பேடில் 100 அடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் ஆக அனைவரும் கைது செய்யப்பட்டு, நெற்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மாநில தேர்தல் ஆணையம் முற்றுகை

ஆர்ப்பாட்டத்தின்போது மயங்கி விழுந்த பெண் முகத்தில் தண்ணீர் தெளிக்கின்றனர்.

Post a Comment

7 Comments

  1. தடை உத்திரவு வாங்கிய பின்பும் சுயநலவாதிகளின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்க கூடாது FIR போட வேண்டும். விசம் குடித்த போதே தற்கொலை முயற்சி என்று FIR போட்டு இருக்க வேண்டும்.அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறசு யநலவாதிகளின் போராட்டத்தை முரியடிப்போம். வாரீர்,வாரீர்,வாரீர்,

    ReplyDelete
    Replies
    1. viraivil judgement...........

      so ur also selffist b'coz ur get job that same time ur loose the job, the above condition ur life... so be careful mr. Kayalkannan

      Delete
    2. THE BELOW MESSAGE ONLY MY RESPONSIBILITY

      KIND ATTENTION TN GOVERNMENT,

      PLEASE GIVE ME JOB OR ENNAI KARUNAI KOLAI SEITHU VIDUNGAL

      THANKS

      FOR UR TILL NOW NO RESPONCE OUR PROBLEM

      Delete
  2. Today Leave for Porattam

    ReplyDelete
  3. வாக்காளர் அட்டையை திரும்ப கொடுத்தால் பணி கிடைக்கும் என எப்படி தோன்றியது?
    இப்போதுதான் வாக்காளர் அட்டை இல்லாமலே தேர்தல் ஆணையம் கொடுக்கும் வாக்குசாவடி சீட்டு இருந்தால் போதுமே வாக்களிக்க? இது அரசுக்கு தெரியாதா என்ன?
    செய்தியில் ஒரு சகோதரி கோபமாக சொன்னார் ஆடு, மாடு மேய்க்க எதற்கு இந்த சான்றிதல் என்றார்? அதற்கு அந்த சான்றிதல் தேவை இல்லைதான். அவர்கள் சொன்னத்தில் ஒரு உண்மை இருக்கிறது ஆனால் இந்த தகுதி தேர்வு எழுதி நம்மை தரம் தாழ்த்தி கொண்டோம் என்பதுதான் வேதனையான உண்மை.
    முதலில் தகுதித் தேர்வு என்ற வார்த்தை நம்மை தரம் தாழ்த்துகிறது. தகுதியே இல்லாமல் தான் பல்கலை கழகங்கள் சான்றிதல் கொடுக்கிறதா?
    இல்லை அதிக மதிப்பெண் வாங்கினால் மட்டும்தான் வேலை என்றால் எதற்கு ஆசிரியர் பட்ட , பட்டய படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் இத்தனை ஆண்டுகளாய் நடைமுறை படுத்தபடுகிறது. எதோ ஒரு சூழலில் 10, 12 வகுப்பில் மதிப்பெண் பெற முடியாமல் தவிக்கும் ஆசிரிய மாணவர்கள் நிலை என்ன?
    இங்கே மதிப்பெண் மட்டுமே ஒருவனை உருவாக்கும் பொருள் என்றால் அரசுபள்ளிகளில் இத்தனை ஆண்டுகளாய் நியமித்த தகுதி அற்ற ஆசிரியர்களால் உருவான மாணவர் சமுதாயம் எதிகாலங்களில் எப்படி வாழ முடியும்?
    இப்படி தகுதியற்ற ஆசிரியர்களால் உருவான மாணவர் சமுதாயத்தை அரசு மனநல காப்பகத்தில் சேர்க்குமா? மதிப்பெண் குறைவாக பெற்ற அறிவற்றவன் இனி இவனால் இந்த மதிப்பெண் சமுதாயத்தில் வாழ முடியாத தகுதிஅற்றவன் என்று சொல்லி நாடு கடத்துமா?

    ReplyDelete
  4. முதலில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஒரு துறையில் கணவன் மனைவி மகன் மகள் என அரசு பணி பெறவே முடியாத மாதிரி சட்டம் இயற்ற வேண்டும்.
    குடும்ப தொழில் போல மாறி விட்டது ஆசிரியர் பணி மட்டும் அல்ல மொத்த அரசு துறைகளுமே .
    சுதந்திரம் பெற்று இத்தனை நாளாக இந்த நவீன தீண்டாமை உள்ளதை நீக்க முடியவில்லை.
    இதற்க்கு ஒரே தீர்வு தான் அரசு பணியில் உள்ளவர்கள் மற்றபணிகளில் உள்ளவர்களை கேவலமாக நடத்துவது நவீன தீண்டாமை இன்றி வேறென்ன்ன? இந்த நாட்டில் மாதம் 3000 சம்பாதிக்கும் வாட்ச்மேனும் பிழைக்கிறான் ஆசிரியர் போல 25000 முதல் 50000, 1,00,0000 மேல் மாத வருமானம் உள்ளவர்களும் பிழைகிரார்கள். தற்போது நம் நாட்டில் எந்த ஒரு தொல்லையும் இல்லாமல் 20000 வரை சம்பாதித்தாலே போதும் 4 பேர் உள்ள குடும்பத்திற்கு அதற்கும் மேல் வரும் வருமானம் அனைத்தும் ஆடம்பர செலவுக்குதான். இதில் ஒரு குடும்பத்தில் உள்ள இருவரும் அரசு பணியாளர்கள் என்றால் 20 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர் சராசரியாக 35000 முதல் 50000 வரை மாத ஊதியம் பெறுகிறார். மனைவியும் சேர்த்தால் மாதம் 100000 இதைவைத்து என்ன செய்ய போகிறார்கள், ஆடம்பர செலவினம் மட்டுமே. தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிக்கவைப்பதும் சேர்த்துதான். தற்போதைய பெண் ஆசிரியர்கள் பலர் 15 முதல் 50 சவரன் வரை சாதரணமாக அணிந்து கொண்டுதான் பள்ளிக்கே வருகிறார்கள். அதைவைத்து தான் இதை சொல்லமுடிகிறது. பயன்படுத்த தெரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக சுமார்ட் போன் உள்ளது.
    இந்த நாடு முன்னேற வேணுமென்றால் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை .

    ஒரு குடும்பத்தில் உள்ள உறுபினர்கள் 1 வருக்கு மேல் அரசின் ஒரே துறையில் பணிபுரியகூடாது.
    வருமான அளவு கண்டிப்பாக குறைக்க படவேண்டும் ஒருவருக்கு கொடுக்கும் ஊதியத்தை 3 பேருக்கு கொடுக்கலாம். புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதன் மூலம் .இதனால் கண்டிப்பாக எதாவது இரண்டு குடும்பம் பிழைக்கும்.

    அரசு பணியாளர்கள் வேறு தொழில் மூலம் வரும் வருமானத்தை மறைத்தால் கண்டிப்பாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறை பிள்ளைகளும் அரசு பணி பெற வாய்பளிக்க கூடாது.

    வருமான வரி உச்ச வரம்பு என்ற நிலைக்கு கீழ் வருமானத்தை செயற்கையாக குறைத்து காண்பித்தால் அடுத்தமுறை 50% வருமானத்தில் வரியாக செலுத்த வேண்டும். இதே போல் மூன்று முறைக்கு மேல் தொடர்ந்தால் பணி நீக்கம் மற்றும் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு மற்ற அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்கள் என்பதால்.

    இனி பணமே இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும். அனைத்தும் கணினி மயம். ஒரு ருபாய் என்றாலும் கார்டுன் முலமே அனைத்து பரிமாற்றங்களும் பெட்டிகடையாக இருந்தாலும்.

    ReplyDelete
  5. இதற்கு ஒரு முடிவு உண்டு:-
    மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதுதான். ஒரே மதிப்பெண் எடுத்திருக்கும்பட்சத்தில் மதிப்பெண்ணை பின்பற்றி தேர்ச்சி பெற்றவரை வரிசைபடுத்துவதே இதற்கு ஓர் முடிவை தரும்

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..