பணியில் சேரப்போகும் நண்பர்களே வாழ்த்துக்கள்.....

ஒன்றைச் செய்ய முற்படும்போது அதற்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிற உண்மை.

உங்களுக்கு எப்போதெல்லாம் சாதிக்கும் கனவு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்களால் முடியும் என்னும் உணர்வை உருவாக்கிக் கொள்ளுங்கள். கனவுகளைக் கைவிடாதவர்கள் முயற்சியைக் கைவிடுவதே இல்லை. கனவுகளையும் முயற்சியையும் கைவிடாதவர்களை வாழ்க்கை கைவிடுவதே இல்லை.

மனித வாழ்வின் மகத்தான சோகம் எதுவென்று சாதனையாளர் ஒருவரிடம் சில இளைஞர்கள் கேட்டார்கள். ”எந்த இலக்கையும் வகுத்துக் கொள்ளாமல், வாழ்வில் எதையுமே சாதிக்காமல் இருப்பதுதான் மகத்தான சோகம்” என்றார் அவர். 

இளைஞர்கள் புறப்பட நினைத்தபோது, ”இன்னொரு பெரிய சோகம் இருக்கிறது” என்றார்.
”எல்லா இலக்குகளையும் எட்டிவிட்டு, புதிதாய் எட்ட இலக்குகள் எதையும் வகுக்காமல் பழைய வெற்றிகளின் போதையிலேயே வாழ்வைக் கழிப்பதுதான் ஆகப்பெரிய சோகம்” என்றார் அவர்.

முயற்சிக்கு முன்னால் வரும் தயக்கமும்
வெற்றிக்கு பின்னால் வரும் மயக்கமும்
நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது.........

முயற்சியைதொடருவோம் www.selectedcandidates.com வலைதளத்துடன்......