தமிழகத்தில் 2,176 டாக்டர் நியமனம் : 12ம் தேதி போட்டி தேர்வு

'ஒத்திவைக்கப்பட்ட, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வு, 12ம் தேதி நடக்கும்' என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176 உதவி டாக்டர்களை தற்காலிகமாக, போட்டி தேர்வு நடத்தி நியமிக்கப்படுவர் என, அரசு அறிவித்தது. இதற்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், செப்., 18ம் தேதி போட்டித் தேர்வு நடத்த இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து, செப்., 27ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில், அசாதாரண சூழல் ஏற்பட்டதால், அடுத்த நாள் நடக்க இருந்த போட்டித் தேர்வு, தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. 'இந்த தேர்வு, இம்மாதம் 12ம் தேதி, ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில், மூன்று மையங்களில் நடக்கும். 'ஹால் டிக்கெட்டை',www.mrb.tn.gov.in என்ற, இணைய தளத்தில் இருந்து,

பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்' என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments