ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது



ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 4-2க்கு என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் தென் கொரியாவின் இஞ்சியோனில் நடைபெற்று வருகிறது.
ஆசிய விளையாட்டின் ஹாக்கி இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை எதிர்கொண்டது.

நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில்
இந்தியாவிடம் தோல்வியுற்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில்
பாகிஸ்தானை இந்தியா வென்றது. சர்தாரா சிங் தலைமை வகித்தார். துணை தலைவர் ஶ்ரீஜேஷ் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் இந்திய ஆடவர்
அணி பாகிஸ்தானை 8 முறை எதிர்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி ஒரு முறையும், பாகிஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 1996,1998 ஆகிய ஆண்டுகளில்
நடைபெற்ற போட்டியில் மட்டுமே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இதில் 1998-ம் ஆண்டில்
பாங்காங்கில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தன்ராஜ் பிள்ளை தலைமை வகித்தார்.

கடைசியாக 1982ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி 1958–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இதுவரை இந்திய அணி 1966 மற்றும் 1998–ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கம் வெல்வதற்கு கிடைத்த அருமையான வாய்ப்பை இந்தியா நன்கு பயன்படுத்தி கொண்டது.

8 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 9– வது முறைக்கு குறி வைத்தது. ஆனால் இந்திய அணி அதனை முறியடித்ததால் பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது மட்டுமல்லாமல் வரும் 2016ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாகத் நுழையும் தகுதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

400மீ் தொடர் ஓட்டம்: இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை

தென்கொரியாவின் இன்ச்சான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 400 மீ் தொடர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Post a Comment

1 Comments

  1. Yes! Yeah! We won gold in hockey. Hey Pakistani dogs we r indian da. TET kashtam lam hockey gold la maranthuruchu. Yes! Yes! Yes!

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..