ஃபேமிலி
டின்னர் ‘சேர்ந்து உணவருந்துகிற குடும்பத்தார், வாழ்க்கையிலும் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள்’ என்பது
பிரபல வாசகம். உணர்ந்தவர்களுக்கு மட்டுமே
தெரியும் அந்த உண்மை!
குடும்பத்துடன்
சேர்ந்து உணவருந்துவதால் பதின்ம வயதினரிடம் (டீன்
ஏஜ்) நல்ல குணங்கள் உருவாவதாக
தெரிவித்திருக்கிறது கனடாவில் செய்யப்பட்ட ஆராய்ச்சி. குடும்பத்துடன் உணவருந்தாமல் தனிமையில் இருப்பவர்களில் சிலரே பயம், மன
உளைச்சல், தற்கொலை முயற்சி போன்றவற்றுக்கு
ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. மது
அருந்துபவர்கள் மற்றும் போதை மருந்துக்கு
அடிமையானவர்களும் குடும்பத்தின்
அன்பும்
வழிகாட்டுதலும் கிடைக்கப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். இணையக் குற்றத்தில் ஈடுபடும்
பதின்ம வயதினரும் பெற்றோரால் ஏதோ ஒரு விதத்தில்
புறக்கணிக்கப்பட்டவர்களாகவே
இருக்கின்றனர். வாரம் 2 அல்லது 3 முறையாவது
பதின்ம வயது பிள்ளைகளுடன் சேர்ந்து
உணவருந்துவதன் மூலம் அவர்களின் விருப்பு
வெறுப்புகள், ஏக்கங்கள், தேவைகள், பிரச்னைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும். பெற்றோருடன்
சேர்ந்து சமச்சீர் உணவைச் சாப்பிடுவதால் பருமன்
பிரச்னைக்கு ஆளாவதும் தவிர்க்கப்படுகிறது. மனநிலையும் ஆரோக்கியமாவதால், படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது.
பெற்றோருடன் நல்லுறவைப் பேணுவதற்கும் மன உளைச்சலுக்கோ, வீண்
கவலைகளுக்கோ ஆளாகாமல் நலமான வாழ்க்கையை வாழவும்
மறைமுகமாக உதவுகிறது. இணையத்தில் வீணாக்கப்படும் நேரமும் குடும்ப உறவுகளுக்காக
நல்ல விதத்தில் செலவிடப்படுகிறது. குடும்பத்துடன் உணவு அருந்துவதால் ஏற்படும்
பிற பயன்கள்… பிள்ளைகளிடம் நல்ல நட்பு ஏற்படுவதால்
அவர்களை சரியான வழியில் நடத்த
உதவும். அவர்களின் படிப்பைக் கண்காணிக்க முடியும். மது, சிகரெட் போன்ற
தீய பழக்கங்களுக்கு அடிமையாகாதபடி, அறிவுரை சொல்லித் திருத்த
முடியும். பிள்ளைகளின் மனக்குறைகளை கண்டுபிடித்து எளிதாகக் களைய முடியும். பிள்ளைகளை
உயர்ந்த லட்சியங்களுடன் வளர்க்க முடியும். பிரச்னைகளை
எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்க முடியும். தன்னம்பிக்கையை
வளர்க்க முடியும். சமச்சீர் உணவை சாப்பிட வைப்பதால்
நோயற்ற வாழ்வுக்கு வழி வகுக்க முடியும்.
ஒழுக்க உணர்வை உண்டாக்க முடியும்
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..