பள்ளி கல்வித்துறை புது உத்தரவு

 மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில்,மாணவர்கள் ஈடுபடக்கூடாது எனபள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் சில இடங்களில்மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களில்பள்ளி மாணவமாணவியர் பங்கேற்கின்றனர்இதனால்அவர்களது கல்வி பாதிக்கிறது.
கல்வி பாதிக்காமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. இதுபோன்ற போராட்டங்களில்பங்கேற்கக்கூடாது எனமாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். பிரார்த்தனை கூட்டங்கள்நீதி போதனை வகுப்பு மற்றும் பாட வேளைகளில்வகுப்பு ஆசிரியர்கள்மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments