அவசரத் தேவைகளுக்கு உதவி எண் அறிவிப்பு!


பத்திரிகைச் செய்தி - 28 . 3 . 2020

கொரோனா நெருக்கடி காரணமாக , மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து , பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

அவசர காரணங்களுக்காக பிரயாணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒரு தனி கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது . தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு , திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் ,


அவர்கள் அவசரகால கட்டுப்பாட்டறை எண் . 75300 01100  ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gopcorona2020 @ gmail . com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் . மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் .

மேற்படி கட்டுப்பாட்டறையை கண்காணிக்கபெருநகர சென்னை காவல் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது . இந்தச் சேவையானது , மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர , சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது .

அவசர உதவி எண் . 75300 01100

மின்ன ஞ்சல் முகவரி -
gcpcorona2020 @ gmail . com .

Post a Comment

0 Comments