தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம் - தினகரன்

"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு "

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

7 Comments

  1. இவர்கள் கோரிக்கைப்படி 2012 ஆம் ஆண்டு பணிநியமனம் போக மீதமுள்ள இடங்களில் இதற்க்கு முன்பு சான்றிதல் சரிபார்ப்பில் கலந்து கொண்ட நபர்களுக்கு பணிநியமனம் வழங்கினால் இப்போது எவ்வளவு இடம் தமிழுக்கு இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!

      1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....


      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!



      Delete
  2. பணிநியமனம் பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காலைவணக்கம். இன்றாவது தடை விலக ஆண்டவனை பிரார்த்திப்போம்

    ReplyDelete
  3. போராட்டத்தில் உள்ள ஒருவர் ஆசிரியராக தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுக்கப்பட்டால்......(சார்...ஏன் சார் இந்த பாடத்த மட்டும் நடத்த மாட்டேங்கறீங்க......) நாங்கள் அப்போது படித்தோம்...அப்போது இது மாதிரி இல்ல..... என்ன ஒரு முட்டாள் தணமான பாடம்....இந்த பாடம் தொடர்ந்தால்...இப்போது மட்டும் அல்ல... எப்போதும் மூத்த ஆசிரியர் பாடம் நடத்த முடியாது...ஏ.... பாட நூல் கழகமே....உடனியாக பாடத்தை நீக்கு....இல்லையெனில்....(இதுக்கு மேல என்ன வசனம் பேசுவாங்கனு தான் உங்களுக்கே தெரியுமே.....)......என்ன பொழப்போ.....

    ReplyDelete
  4. Naam posting. Ponapiragu ivanga unionil seravendam. Nam gov ku adharavaga work pannuvom nandriyudan

    ReplyDelete
  5. ஆசிரியர் மற்றும் பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் நண்பர்களே sorry...sorry..sorry,

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..