ராணுவ பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம் மற்றும் பொதுப் பணி வீரர்களுக்கான, எழுத்துத், தேர்விற்கான முடிவுகள், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவத்தில், தொழில்நுட்பம் மற்றும் பொதுப்பணி வீரர்கள் மற்றும், 'டிரேட்ஸ் மேன்' பணிகளுக்கான ஆட்கள் தேர்வு, புதுச்சேரியில், கடந்த ஜூலையில் நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள், இதில் பங்கேற்றனர்.

இதில், தேர்வு செய்யப்பட்ட, 516 பேருக்கு, ஆக., 31ம் தேதி சென்னை, ராணி மேரி கல்லுாரியில், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், தமிழக அரசின், 'www.tn.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள், வரும் 29ம் தேதி, அனைத்து உண்மை சான்றிதழ்களுடன், சென்னை கோட்டையில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்

Post a Comment

2 Comments

  1. சாய் ராம் ெஐய் சாய் ராம் வெற்றி நமதே

    ReplyDelete
  2. காலை வணக்கம்,
    நாளை நமதாக இறைனை வேண்டுவோம்

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..