ன மற்றும் அரேபிய மொழிகளில் திருக்குறள் மற்றும் பாரதியார் படைப்புகள்

தஞ்சை தமிழ் பல்கலை சார்பில், திருக்குறள் மற்றும் பாரதியார் படைப்புகள் சீன மொழியில், மொழி பெயர்க்கப்பட்டு அச்சுக்கு தயாராக உள்ளன. சென்னையில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் அரேபிய மொழியில், திருக்குறள், பாரதியார் படைப்புகளை மொழிபெயர்க்கும் பணியை முடித்துள்ளது.

ரூ.41 லட்சம்:கடந்த, 2011ல், 'திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவை, சீன மொழியில் மொழி பெயர்த்து வெளியிடப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.இதற்காக, திருக்குறள் மொழி பெயர்ப்பிற்கு, 41 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, தஞ்சை தமிழ் பல்கலையிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. இதை, சீன மக்கள் அதிகம் பேசும் மான்டரின் மொழியில், அந்நாட்டு கவிஞரும், சமீபத்தில் தமிழக அரசிடம் இருந்து மொழி பெயர்ப்பிற்கான சிறப்பு விருதை பெற்றவருமான யூஷி, மொழி பெயர்த்துள்ளார்.

தமிழில் உள்ளது போலவே, ஒன்றே முக்கால் அடியில், திருக்குறள், சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பு, யூஷியிடம் அளிக்கப்பட்டு, அவர் அதை கொண்டு மொழி பெயர்த்துள்ளார்.

இதுகுறித்து, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை கூறியதாவது:திருக்குறளை, சீன மொழியில் மொழி பெயர்க்கும் பணி முடிந்து, தற்போது தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அச்சாகி வெளியிடப்படும்.

பாரதியார் பாடல்களில், சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரனால் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பாடல்கள், அதே போல், பாரதிதாசன் பாடல்களில், பேராசிரியர் தட்சிணாமூர்த்தியால் தேர்வு செய்யப்பட்ட பாடல்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.அதன் பின் அதை வைத்து, சீன கவிஞர் யூஷியே, சீன மொழியில் மொழி பெயர்த்துள்ளார். இதில், பாரதியார் பாடல்கள் மொழி பெயர்ப்பு பணி முடிந்துவிட்டது. பாரதிதாசன் பாடல்கள் மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குறளை அரேபிய மொழியில் மொழி பெயர்க்கும் பணியும் முடிந்துள்ளது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் இப்பணிகளை, சென்னை பல்கலை அரபிக் துறை பேராசிரியர் முடித்துள்ளார்.இதுகுறித்து, உலகத்தமிழ் ஆராய்ச்சி மைய இயக்குனர் விஜயராகவன் கூறியதாவது:

திருக்குறள் மொழி பெயர்ப்பு முடிந்து தயாராக உள்ளது. விரைவில் அச்சேற்றப்பட்டு, வெளியிடப்படும்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் படைப்புகளில், குறிப்பிட்ட பாடல்கள், சீன மொழி பெயர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டது போலவே தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள அரபு நிறுவனம் ஒன்றால், பேராசிரியர்களை கொண்டு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பணிகள் விரைவில் முடிந்து அவை வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

2 Comments

  1. காலை வணக்கம்,
    நாளை நமதாக இறைனை வேண்டுவோம்

    ReplyDelete
  2. தேர்வான தேரோடும் திருவாரூர் நண்பர்களே நாமும் நன்றி தெரிவிக்க ஒன்றுபடுவோம்
    ராஜராஜன்
    9944355534.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..