மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது..

ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக நீதிபதி திரு.சசிதரன் அவர்கள் வழங்கிய தடையானைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

மதுரை நீதிமன்ற வழக்கு விசாரணைப் பட்டியலில் தடையானைக்கு எதிரான வழக்கும் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழக அரசின் உயர் பதவில் இருக்கும் IAS அதிகாரி ஒருவர் தமிழக அரசின் AG திரு.சோமையாஜி அவர்கள் மதுரைக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இதனால் வழக்கு விசாரணைக்கு வந்தும் அரசு தரப்பில் ஆஜராகத காரணத்தால் வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்படுமோ என்ற சந்தேகத்திற்கு விடை கிடைத்துள்ளது.

வழக்கானது மதியம் 1 மணிக்குள் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளதாம்.எல்லாம் நல்லபடியாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.