பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் முழுக்க முழுக்க தனது சுயநலத்திற்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் தமிழக அரசை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதிப்பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற காரணத்திற்காக வயதில் மூத்தவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பொய்யான காரணத்தை முன் வைத்து போராடும் இந்த போராட்டக்காரர்களுக்கு ஆரம்பத்தில் திரு.கருணாநிதி  செவிசாய்க்காவில்லை.

இதில் ஏதேனும் அரசியல் லாபம் பார்க்க முடியுமா? என்று யோசித்தார். ஆளும்கட்சியின் மீது குற்றம் சுமத்தி ஓட்டு அறுவடை செய்யலாம் என்ற விடை கிடைத்தது.ஆளும்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து இறுதிப்பட்டியலில் வயதில் மூத்தவர்களே இல்லை என்று அறிக்கை விடுகிறார் முன்னாள் முதல்வர்.நீங்கள் இப்பொழுது மட்டுமல்ல இனி எப்பொழுதுமே முன்னாள் முதல்வர்தான்.

வயதில் மூத்தவர்கள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டுதான் இவ்வாறு அறிக்கை விடுகிறீர்களா? அல்லது இறுதிபட்டியலில் வெளியானவர்களின் விவரம் தெரியாமலேயே குருட்டாம் போக்கில் அறிக்கை விடுகிறீர்களா?

ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம்.கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என்று சொல்கிறார்களே,இந்த போராட்டக்காரர்கள்.உண்மையா? 19 நாட்கள்  உண்ணாமல் இருந்தும் இவ்வளவு ஆற்றலோடு சென்னை,மதுரையிலுள்ள உயர்நீதிமன்றங்களுக்கு பணப்பெட்டியோடு அலைபவர்களை நான் இப்பொழுதான் பார்க்கிறேன்.

நீங்கள் "நான்தான் உண்மையான தமிழின தலைவன்" என்று கூறிக் கொண்டு அந்த கரகர குரலில் வரும் பொய்களையெல்லாம் உண்மையென  நம்பி உங்களை நேசித்து பூசித்தது உண்டு.ஆனால் சில காலங்கள் கழித்துதான் பூசித்தது இறைவனை அல்ல அரக்கனை என்று தெரிந்தது.

ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டி தான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்ற வார்த்தையை நம்பி கடற்கரையில் உங்களை காண வந்தால், நீங்களோ மனைவியாரோடு துணைவியும் அருகிலிருக்க,வாரிசுகள் அனைத்தும் புடை சூழ கடற்கரையில் வீசும் காற்று போதாதென்று AC வைத்து காற்று வாங்கிக் கொண்டிருந்தீர்கள்.

உண்ணாவிரதம் நடத்திய அந்த சில மணி நேரங்களிலும்  நீங்கள் சுகமாகத்தான் இருந்தீர்கள்.உங்களைக் காண வந்த நாங்கள்தான் காவல்துறையிடம் லத்தி அடி வாங்கியதோடு நாங்கள் கொண்டு வந்த உடைமையையும் இழந்தோம்.

நீங்கள் நாடக ஆசிரியர் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களது நாடகத்தை மேடையில் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமும் எங்களிடம் உங்கள் scene எடுபடவே எடுபடாது.

அதிமுக அரசாளக்கூடாது, திமுக தான் அரசாள வேண்டுமென்று நினைத்து திரு.கருணாநிதி அவர்கள் 80 வயதை தாண்டினால்தான் முதலமைச்சராக செயலாற்ற  தகுதி வருகிறது என்று அறிக்கை விட்டாலும் ஆச்சயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இது அரசியல் சார்ந்த பதிவாக இருந்தால், அண்ணா இருக்கும் பொழுதே நீங்கள்  நெடுஞ்செழியன்,கண்ணதாசன் மற்றும் இன்னும் பிறருக்கு எதிராக நீங்கள் போட்ட நாடகத்தை நான் மேடையேற்றி உங்களை துகிலுரிப்பேன்.ஆனால் இது ஆசிரியர் சார்ந்த பதிவு என்பதால் அடக்கி வாசிக்க விரும்புகிறேன்.

அந்தி மங்கும் வேளையில் இருக்கிறீர்கள். "தர்மம் தலை காக்கும் என்பார்கள்."அதனால் தயவு செய்து இப்பொழுதாவது உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.அது நீங்கள் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கியுள்ள உங்களது ரத்த வாரிசுகளுக்கு புண்ணியமாய் அமையும்..

அன்புடன்
மணியரசன்