பட்டியலில் இடம் பெற்று பணிநியமனத்திற்கு காத்திருக்கும் யாறும் உங்களுக்கு வேலை கிடைக்கக்கூடாது என்று எந்த கடவுளிடமும் வேண்டமாட்டார்கள்.

அதற்க்கான அவசியமும் இல்லை. 12347 பேருடன் உங்களுக்கும் பணிநியமனம் கிடைத்தால் அப்போது அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதை விடுத்து நமக்கு கிடைக்கவில்லை, இவர்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்று நீங்கள் தவறான ஆட்களை சந்தித்து தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உணருங்கள். பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் அனைத்து தகுதியும் உடையவர்களே.

 நீங்களும் தான், போராட்டம் என்ற முறையை மாற்றி வேண்டுகோளாக வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை. அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம். ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு கிடைக்கிற வாய்ப்புதான்.

தவறான வழிகாட்டுதலின் படி நீங்கள் போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது எதிர்வினையையே தரும். எங்களை பாதிக்காமல் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதேபோல் நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் இருக்கும்.

எனக்கு கிடைக்கவில்லை, அவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம், என்னால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்ற மன நிலையை மாற்றி யோசியுங்கள் நல்லதே நடக்கும்.

நன்றி.திரு.முத்துக்குமார் sir.