இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ!

ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் ஜூடோவில் ஒரே ஒரு அசைவை மட்டுமே அவனுக்க கற்றுக் கொடுத்திருந்தார்.

ஒரு நாள் நிகிடோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் மெதுவாக “மாஸ்டர், இந்த அசைவைத் தவிர நீங்கள் வேறு அசைவுகளை ஏன் எனக்குக் கற்று தரவில்லை.’ “நீ இந்த ஒரு அசைவை மட்டும் தினமும் பயிற்சி செய்து வா, போதும். வேறு எதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆசிரியர் பதிலளித்தார்.

ஒன்றும் புரியாத சிறுவன் நிகிடோ, ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்து, அந்த ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். 

மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். ஆனால் நிகிடோவோ, தனக்குத் தெரிந்த அந்த ஒரே ஒரு அசைவை மட்டுமே உபயோகித்து அவரை எளிதாகத் தோற்கடித்தான். தனது வெற்றியை நம்ப இயலாத நிகிடோ, இறுதிப் போட்டிக்குத் தயரானான்.

இம்முறை அவருடன் ஜூடோ சண்டை போட இருந்தவர், உருவத்தில் பெரிவராகவும், வலிமையானவராகவும், அதிக அனுபவமுள்ளவராகவும் தோன்றினார். சிறிது நேர சண்டைக்குப் பின், நிகிடோ சோர்வுற்றதை கவனித்த நடுவர், அவனுக்கு அடிபட்டு விடப் போகிறதே என்ற கவலையில், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.

“வேண்டாம், அவன் தொடர்ந்த சண்டை போடட்டும்; ஒன்றும் ஆகாது’ என்று நிகிடோவின் மாஸ்டர் உறுதியாகக் கூறினார். போட்டி மீண்டும் துவங்கியபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிகிடோவுக்கு எதிராக விளையாடியவர், கையில்லாத சிறுவன்தானே, என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என்று சற்றே அலட்சியமாகிவிட, நிகிடோ அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தனக்குத் தெரிந்த அந்த ஒரே அசைவால் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்தான். பிறகென்ன, நிகிடோ அப்போட்டியை மட்டுமல்லாமல், அத்தொடரையே கைப்பற்றி, வெற்றிவீரனானான்.

வீடு திரும்பும் வழியில், இறுதிப் போட்டி வரை அவனுக்கு எதிராக விளையாடியவர்களின் பல்வேறு அசைவுகளைப் பற்றி நிகிடோவின் மாஸ்டர், அவனுக்கு விளக்கிக் கொண்டே வந்தார். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நிகிடோ, அவரிடம் கேட்டான்: “மாஸ்டர் ஒரே ஓர் அசைவை மட்டுமே வைத்துக் கொண்டு என்னால் எதிராளியை எப்படி எளிதில் வீழ்த்த முடிந்தது?’

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஜூடோவின் மிகக் கடினமான அசைவை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, நீ அதில் மிகவும் தேர்ந்து விட்டாய். இரண்டாவதாக உனது அசைவை எதிர்கொள்ள, உனது கையைப் பிடித்துத் தடுப்பதுதானா ஜூடோவிலே உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு இயக்கம். உனக்கு இடது கை இல்லாததால், எதிராளிகளுக்கு அதை செய்ய முடியாமல் போனது. எனவே உனது பலவீனத்தால் தான் உன்னால் எளிதாக வெற்றி பெற முடிந்தது’ அதாவது நிகிடோவின் மிகப்பெரும் பலவீனம் அவனுக்கு மிகப்பெரும் பலமாக மாறி, அவனை வெற்றி பெறச் செய்தது.

சில நேரங்களில் நம்மிடம் சில பலவீனங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு, சூழ்நிலைகளையும், பிறரையும், அதிஷ்டத்தையும், ஏன், நம்மையுமே கூட குறை கூறிக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நாள் நமது பலவீனமே நமக்கு பலமாக மாறக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை.
நாம் ஒவ்வொருவருமே விசேஷமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள்தான். எனவே, நமக்கு பலவீனங்கள் இருப்பதாக நினைக்காமல், நம்மை நாமே தாழ்வானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ நினைத்தக் கொள்ளாமல், நமக்கு இறைவன் தந்த வாழ்க்கை என்ற வரத்தை முழுவதுமாக உபயோகித்து, அதில் நம்மால் முடிந்த அளவு வெற்றி பெற முயற்சிப்போமாக!


-ஆர். ஸ்ரீமதி நவிச்சந்தர்

Post a Comment

17 Comments

  1. சென்னையில் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசு அத்தீர்ப்பின் நகலைக்கொண்டு மதுரையில் மேல்முறையீடு செய்து,தனிநீதிபதியின் கையொப்பம் பெற்றவுடன் அத்தடையாணை தானாக நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,,இம்முறைக்கு RES JUDICATA ( A MATTER ALREADY SETTLED IN COURT, CANNOT BE RAISED AGAIN) என்று பெயர்....

    ReplyDelete
  2. மிக அருமை. முறையான பயிர்ச்சியும் முழு நம்பிக்கையும் இருந்தால் எதிலும் வெல்லலாம்.

    ReplyDelete
  3. அன்புள்ள. மணியரசனுக்கு,
    தங்களின் எழுத்து பணி மிக சிறந்த சேவை 12000 பேரின் எதிர்பார்ப்பு. உங்களுக்கு பல்வேறு பணிகள் இருப்பினும் அதன் மத்தியிலும் தாங்கள் எழுதும் கட்டுரை பலரின் கண்ணீர் துடைத்து ஆறுதல் கூறும் கரங்கள். ஒரே ஒரு வேண்டுகோள் உங்களிடம் வைக்க விரும்புகிறேன். சில நேரங்களில் நமது வலைதளத்தை வந்து பார்க்கும் போது உங்கள் கட்டுரை பதிவேற்றம் செய்யாத காரணத்தால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேர்கிறது. அதே சில நேரங்களில் தொடர்ச்சியாக 5&6 கட்டுரை வெளியிடுகின்றீர். அதனை நாங்கள் வரவேர்க்கிறோம் எழுத்து பணி என்பது எல்லா நேரங்களிலும் வராது பல்வேறு சூழ்நிலை உள்ளன அதையும் அறிவோம். ஆனால் அந்த 5&6 கட்டுரைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் தந்தால் மிக சிறப்பாக இருக்கும் எல்லோரிடமும் இந்த எதிர்பார்ப்பு உள்ளன ஆகவே தாங்கள் இதனை அன்பு கோரிக்கையாக ஏற்று குறிப்பிட்ட கால இடைவெளியில் தந்தால் மிக சிறப்பாக இருக்கும். இது உங்களில் ஒருவனாக இந்த கோரிக்கை வைக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக.....

      நன்றி.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா

      Delete
  4. செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!
    பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    Immunize என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

    ReplyDelete
  5. ஒரு கிராமத்தின் மாணவனின் கதை:
    =============================

    என்னுடைய பெயர் அருள்
    ஊர் நல்லாப்பாளையம் விழுப்புரம் மாவட்டம்.
    தற்போது ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்று கலைந்தாய்வயைும் கலந்து கொண்டு பணி நியமணம் பெற போகும் நேரத்தில் தடையாணை கொடுக்கப்பட்டது.

    நான் கண்ட துன்பகள்
    ===========================

    நான் பள்ளி படிப்பை தொடர என் குடும்ப சூழ்நிலை விடவில்லை. 1-5 வகுப்பு பயின்றேன் வறுமையின் காரணமாக என்னை ஐந்தாம் வகுப்பிலேயே நிரித்தி விட்டார் 10 வயதில் செம்மரி ஆடு மேய்க்க விட்டார் இரண்டு ஆண்டுகள் கிழிந்த துணிகளை அணிந்து கொண்டு தினமும் மதிய உணவு கிடைக்காது வாரத்தில் இரண்டு முறை மட்டும் சோறு கிடைக்கும் தினமும் இரவு கூழ்தான் உணவு. இரண்டு தீபாவளிக்கு ஒரு முறை மட்டுமே ஆடை எடுத்து தருவாங்க என்னுடன் ஆடு மேய்க்கும் நண்பர்கள் நான் சிறியவன் என்பதால் என்னை ஆடு மேய்க்கும் கூட்டத்தில் அனுமதிக்க மாட்டார்கள்.
    நான் தனியாக அனைத்து ஆடுகளையும் வேகாத வெயிலில் சிரமப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தன அப்போது பள்ளிக்கு சென்று நண்பர்களை பார்த்து நாமும் பள்ளுக்கு போக முடியலனு எத்தனயைே முறை அழுதிருக்கிறேன் என்னால் அந்த சிறிய வயதில் ஆடு மேய்க்க முடியவில்லை அப்பொழுது என் அப்பாவிடம் என்னை பள்ளியில் சேர்த்து விடுங்கனு அழுதேன்அதற்கு அவர் நீ பள்ளிகூடம் போக தேவல ஆடு மேய் என்றார் நான் தினமும் பள்ளியில் சேர்த்து விடுங்கனு அழுவேன் என் அப்பாவும் மனம் இறங்கி வந்து என்னை மறுபடியும் பள்ளயில் சேர்த்து விட்டார்.

    அதன் பிறகு ஐந்தாம் வகுப்பிலேயே மறுபடியும் சேரும்போது என்னால் அ க ங ச கூட படிக்க தெரியவில்லை அதன்பிறகு என்னுடைய விடாமுயற்சியினால் மற்ற மாணவர்களைப் போல ஓரலவிற்கு படிக்க முயன்றேன்
    ஆனால் என் வறுமை பள்ளிக்கு சேர்ந்த பிறகும் விரட்டியது விடுமுறை நாட்களில் ஆடுமேய்ப்பேன
    பள்ளி நாட்களிலும் என் அப்பா என்னை ஆடுமேய்க்க சொல்வார்
    எப்படியே கஷ்டப்படு எட்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு முதல் மாணவனாக திகழ்ந்தேன்
    பிறகு ஒன்பதாம் வகுப்பு கண்டாச்சிபுரம் பள்ளியில் சேர்ந்து படிக்கும்பொழுது சூழ்நிலையின் காரணமாக என்னால் சரியாக படிக்க முடியவில்லை காரணன் எங்கள் நில்த்தில் கத்தரிகாய், தக்காளி, கீரை, வள்ளிகிழங்கு போன்றவற்றை எங்கள் நிலத்தில் பயிர் செய்வார்கள் அதை மிதிவண்டியில் ஊர்ஊராக விற்பனை செய்பவனும் நான்தான்.
    ஒன்பதாம் வகுப்பில் பெயில் ஆகர நிலைமையில் இருந்தேன் என்னுடைய நண்பரகள் நான் சரியாக படிக்கமாடடேன் என்பதற்காக யாரும் என்னுடன் பேசமாட்டார்கள்
    நான் பல இன்னல்களுக்கும் அப்பால் ஒன்பதாம் வகுப்பை கடந்தேன்.
    பத்தாம் வப்பில் சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர் அண்ணாதுரை ஐயா அவர்கள் ஆங்கில பாடலை நடத்தி தேர்வு ஒன்றை வைத்தார் அத்தேர்வில் ஒரு எழுத்து பிழையில்லாமல் எழுபவருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்
    நூறு மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுதினர் அதில் ஆறு மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
    அப்பொழுது அண்ணாதுரை ஆசிரியர் என்னை பாராட்டி அப்போது உன்னிடம் திறமை இருக்கு உன்னால் சாதிக்க முடியும் என்று ஊக்கத்தை ஏற்படுத்துவார்
    அவரின் அறிவுறைப்படி படித்தேன் பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண் பெற்றேன்.
    பதினொன்றாம் வக்குப்பில் எந்த குறிக்கோளின்றி பி குரூப் சேர்ந்தேன் இப்படிதான் படிக்க வேண்டும் என்று ஒரு வறையறை இல்லாமல் எந்த வேலைக்கு போவது என்று கூட யாருடைய வழிகாட்டுதல் இன்றி பன்னிரண்டாம் வகுப்பில் 794 மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது
    பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிக்கு போய் வந்த பிறகு காலை மாலை புளியங்கொட்டை வியாபாரத்திற்கு செல்வேன் அதில் கிடைத்த லாபத்தை சேமித்து வைத்தேன் அவை எனக்கு இளங்கலை வேதியியல் பட்ட படிப்பில சேர அந்த தொகை எனக்கு உதவியாக இருந்தது
    நான் சென்னை நந்தனம் கல்லூரியில் படிக்கும்பொழுது சனி ஞாயிறு அன்று கட்டடம் கட்டும் வேலைக்கு செல்வேன் அதிகபட்சமாக நான் ஷல்லிபோடும் வேலைக்கு செல்வேன் அந்த வேலை செய்யும்போது மிகவும் வெயில் தாங்க முடியாமல் தண்ணீரை மேலே ஊற்றிகொண்டு டொக்கில் நின்றுகொண்டு கலவை சல்லியை தூக்கி கொடுப்பேன்
    அந்த வேலை எனக்கு பதுசு என்பதால் கொஞ்சநேரமாவது ஓய்வு கொடுப்பார்களா என்று ஏங்குவேன்
    என்னுடைய இளங்கலை படிப்பிற்கு தேவையான அனைத்து செலவையும் நான் கடினமாக உழைத்து ஈட்ட பணமே
    இப்படி கஷட்டப்பட்டு படித்த நான்
    மாண்புமிகு முதல்வர் அம்மா ஆட்சியில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறப்போகும் நேரத்தில் ஒரு சில சூழ்நிலைவாதிகளின் பெயர் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்று வழக்கை தொடுத்து தடையானணயை பிறபித்து உள்ளனர்
    அம்மா அவர்கள் இந்த சூழ்நிலைவாதிகளின் சூழ்ச்சியை முறியடித்து பணி நியமனம் விரைந்து வழங்குமாறு அம்மாவின் பொற்பாதம் தொட்டு கேட்கிறேன் அம்மா

    ReplyDelete
    Replies
    1. துன்பங்கள் வந்து
      சேரும்போதுதான்
      வாழ்க்கையின் பயணத்தை
      உணரமுடிகிறது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. கவலை வேண்டாம் நன்பரே
      ஏதோ அவர்கள் மட்டும் தான் பாவம் என்றும் கவலை என்றும் கஷ்டம் என்று கூறுகின்றார்கள் ஏன் தேர்வான நாம் மனிதர்களில்லையா நமக்கு கஷ்டம் இல்லயா வேதனை இல்லயா காலனா லஞ்சம் குடுக்காம நம்மை போன்ற கஷ்டப்பட்டவர்களுக்கு வேலை கொடுத்தால் அதை அழிக்க ஒரு கூட்டம்
      டோன்ட் வொரி நீர் பள்ளிக்கு செல்லும் காலம் வெகு விரைவில்
      காட் இஸ் குட்

      Delete
    4. அருள் நண்பரே உறுதியாக நாம் பணிக்கு செல்வோம்...
      உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் எப்போதும் உண்டு....
      அதை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது...
      அதற்க்காக கொஞ்ச நாட்கள் காத்திருக்க வேண்டும்...அவ்வளவுதான்...

      Delete
    5. மிக ஆழமான துன்பத்தை அனுபவித்து தற்போது இறுதிப்பட்டியல் வரை வந்துள்ளீர்கள்.உங்கள் கடின உழைப்பிற்கான பலனை இறைவன் நிச்சயம் வழங்குவார்.

      Delete
  6. Arul sir unga storya padikkum pothu ennal en kannerai adakka mudiyavillai
    Kandippaga ungalukku god thunai iruppar.
    En thanthai gov job police department so ennaku padikka entha pana kastam illai .ennaku velai seiya vettla servent.
    Anal padikkum vayathil ungal kastam 10 vathil adu meipathu kattida velai....
    God always with u sir don't worry friend.

    ReplyDelete
    Replies
    1. முருகன் நண்பர் அவர்களுக்கு நன்றி

      Delete
  7. என் இனிய நண்பர்களுக்கு அன்பான காலை வணக்கம்

    ReplyDelete
  8. எல்லாருக்கும் வணக்கமுங்கோவ்

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..