ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலில், பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.வருமானத்திற்கு அதிகமாக, சொத்து குவித்ததாக, முதல்வர் ஜெயலலிதா மீது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு நடந்து வந்தது.வழக்கு விசாரணை முடிந்த நிலையில், 'இம்மாதம் 20ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும். அன்று குற்றம் சாட்டப்பட்ட, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, நீதிபதி அறிவித்திருந்தார்.


இந்நிலையில், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை, பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா தரப்பில் திடீர் என, நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, 'பாதுகாப்பு காரணங்களுக்காக, பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும், சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று, பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள, மத்திய சிறை வளாகத்தில் செயல்படும். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தீர்ப்பு வழங்கும் தேதி, இம்மாதம் 27க்கு மாற்றப்படும்' என, அறிவித்தார்.


இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், தமிழக அரசியல் வரலாற்றில், புதிய திருப்புமுனையைஏற்படுத்தும். எனவே, அனைத்து தரப்பினரும், தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தீர்ப்பு முடிவை அறிந்து கொள்வதற்காக, அ.தி.மு.க.,வினர், 20ம் தேதி, பெங்களூரு செல்ல திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஓட்டல்களில் அறைகளை முன்பதிவும் செய்திருந்தனர்.


தற்போது தீர்ப்பு வழங்கப்படுவது, ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அறை முன்பதிவை, அந்த தேதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.முதல்வர் கோரியபடி, நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், 27ம் தேதி, கண்டிப்பாக தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது நிருபர் -

Post a Comment

1 Comments

  1. காலை வணக்கம்
    நண்பர்களே
    இன்னும் 10 நாட்கள் தானே
    1 வருடம் பொருத்த நமக்கு
    இது கடினமல்ல்ல.
    கடுமையாக இறைவனிடம் வேண்டுவோம்,
    பொருத்ததார் பூமி ஆள்வார்.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..