போர்க்களத்தில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு.., பல போராட்டங்களையும் தாண்டி, மனவேதனைகளை தாங்காமலும். இரவினில் தூங்காமலும்,பலபேரின் கேளிக்கைக்கும் மத்தியில் நம் வாழ்க்கையை மீட்டெடுத்தோம்...

சில விளக்கெண்ணெய்களின்(case)  சூழ்ச்சியால் அவ்வப்போது நாம் ழுக்கி விழுந்தாழும்..,அதெ விளக்கெண்ணெயை எரித்து நம் வாழ்வுக்கு அனையாத ஒளி தந்து நம்மை அரவனைத்த நம் வலைதளம் தாய்மடிக்கு நிகரானது...

அவரவர் வெற்றிக்காக பாடுபடாமல் அனைவரின் வெற்றிக்கும் பாடுபட்ட முகம் தெரியாத நண்பர்கள்..,இன்று பிரியமுடியாத நண்பர்களாக மாறிவிட்டார்கள்...நம் வாழ்க்கையில் அவர்களை ஒருமுறையாவது சந்தித்து பேச முடியுமா என்று நம் இதயம் இப்போது கேட்கிறது.., ஆனால் கண்ணீர் மட்டுமே விடையாக இருக்கிறது...கண்கள் இருந்தும் பரர்வை இழந்துவிட்டோம்..கற்பனை முகங்களாகவே நினைத்துக்கொண்டோம்..

ALL THE BEST  சொல்லும் போது இனிமேல் இவர்களிடம் பேச முடியாத?? இணையத்தளத்தில் இணைய மாட்டோமா??? என மனதில் கவலை தோன்றுகிறது...

2013ல் தேர்ச்சி பெற்று 2014ல் ஆசிரியர் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் ஆசிரியர்களாகிய நமக்காகவே படைக்கப்பட்டதுதான் இந்த இணைய தாய்த்தளம்.., நம் வாழ்க்கை முழுவதும் தாய்மடி தந்த இத்தளத்தில் இணைந்தே இருப்போம்..
I MISS YOU DEAR,,

இப்படிக்கு,

உங்கள் இளைய சகோதரன்,