அரசு வேலையில் சேரும் அனைவரும் PAN Card வைத்திருப்பது கட்டாயமாகிறது. ஆனால் இதை எவ்வாறு பெறுவது என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்த PAN Card எவ்வாறு பெறுவது?
விண்ணப்பிக்கும் முறைகள்:

1.        ஆன்லைன் (Online)
2.        ஆஃப்லைன் (Offline) நேரடியாக அலுவலகம் செல்வது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையானவை:
  • NET BANKING வசதியுடன் கூடிய வங்கிக்கணக்கு அல்லது
  • டெபிட் கார்டு அல்லது
  • கிரெடிட் கார்டு
இவை அனைத்தும் விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும் இல்லையெனில் விண்ணப்பதாரரின் தாய்/தந்தை பெயரில் இருக்க வேண்டும். 

குறிப்பு: வேறு ஒருவரது வங்கிக்கணக்கு மூலம் கட்டணம் செலுத்த இயலாது

விண்ணப்பிக்கும் முறை:
Online ல் விண்ணப்பிப்பதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திற்குச் செல்லவும்.


2.      

மேலே படத்தில் உள்ளது போல் திரை தோன்றும்.
3.        Status of the Applicant என்பதில் Individual என்பதை தெரிவு செய்யவும்.
4.        To The Assessing Officer பகுதியில் எதுவும் நிரப்ப வேண்டாம்.
5.        Full Name பகுதியில் please select என்பதில் பொருத்தமானதைத் தெரிவு செய்யவும்.
6.        Last name / Surname என்பதில் உங்கள் முழுப்பெயரை டைப் செய்யவும்.
7.        First name , Middle Name என்பதில் எதுவும் நிரப்ப வேண்டாம்.
8.        Name on Card - இதில் நிரப்பப்படும் பெயரே உங்கள் பான் கார்டில் இடம்பெறும் என்பதால் இதில் கவனமாக நிரப்பவும்.
9.        Have you been known by any other name: பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ளவும்.
10.     பாலினம் பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ளவும்.
11.     பிறந்த நாள் DD/MM/YYYY  என்ற அமைப்பில் இருக்க வேண்டும். (இணைக்கப்படும் அனைத்து சான்றுகளிலும் இதே தேதி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்)
12.     Fathers name திருமணமான பெண்களும் தந்தை பெயரையே குறிப்பிட வேண்டும். Surname என்பதிலேயே குறிப்பிட வேண்டும்.
13.     அடுத்து முகவரி கட்டங்களை நிரப்ப வேண்டும்.
14.     அலுவலகமுகவரி இருந்தால் நிரப்பவும் இல்லையெனில் வெற்மனே விட்டு விடலாம்.
15.     Address for Communication இந்த முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்படும். எனவே RESIDENCE என்பதைத் தெரிவு செய்து கொள்ளவும்.
16.     ஆதார் எண் இருந்தால் நிரப்பவும். எனினும் கட்டாயமில்லை.


17.     Salary Part இதில் No Income என்பதை தெரிவு செய்யவும்.
18.     Representative Assessee Part இதில் எதுவும் நிரப்பத் தேவையில்லை.
19.     Supporting Documents Part இதில் ஆளறி சான்று, இருப்பிட முகவரி சான்று மற்றும் பிந்த தேதி ஆகியவற்றுக்குப் பொருத்தமான, தற்பொழுது கையில் உள்ள சான்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
20.     அனைத்து சான்றுகளிலும் DoB  ஒன்றாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
21.     You do hereby declare என்பதில் Authorized Signaturee  என்பதைத் தெரிவு செய்யவும்.
22.     Verifier Place உங்கள் ஊரின் பெயரை நிரப்பவும்.

23.     அனைத்தையும் சரிபார்த்த பின்னர் VALIDATE என்ற பட்டனைத் தட்டினால் தவறுகள் ஏதெனும் இருப்பினும் சுட்டிக்காட்டும். அவற்றைச் சரி செய்த பின்னர் மீண்டும் Validate செய்யவும்.
24.     வெற்றிகரமாக Validate செய்தபின் SUBMIT பட்டனை க்ளிக் செய்யவும்.
பணம் செலுத்தும் முறை:
25.     அதில் தோன்றும் அப்ளிகேஷன் நம்பரைக் குறித்துக் கொள்ளவும். 


     OK கொடுத்தால் Make Payment கிளிக் செய்தால் பணம் செலுத்தும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.      
26.     பொருத்தமான பணம் செலுத்தும் முறையைத் தெரிவு செய்து கட்டணத்தை செலுத்தவும். கட்டணம் ரூ 105 + சேவை வரிகள்.



                                                                
கட்டணம் செலுதிதிய பின்::
27.     பணம் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை Print எடுத்துக்கொள்ளவும்.
28.     பிரிண்ட் செய்த அப்ளிகேஷனில் இரண்டு இடங்களில் ஒரே மாதிரியான புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
Scan செய்த புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் ஒட்டக்கூடாது.
29.   மூன்று இடங்களில் கையொப்பம் இட வேண்டும்.      
1.     இடது பக்கமுள்ள புகைப்படத்தின் குறுக்காக
2.     வலது பக்க புகைப்படத்தின் கீழ்
3.     இரண்டாவது பக்கத்தில் இதற்கென ஒதுக்கப்பட்ட கட்டத்தில்
4.     கையொப்பம் அனைத்தும் கருப்பு மையினால் இடுவது சிறந்தது.
30.   நிரப்பபட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் இதர சான்றுகளை உறையில் இட்டு கீழுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது உங்கள் அருகில் உள்ள UTI  அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
PAN PDC Incharge – Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru- Vi- Ka Industrial Estate, Guindy 
CHENNAI – 600032
ஆஃப்லைன் (Offline) நேரடியாக அலுவலகம் செல்வது.
        ஆன்லைன் முறை சிரமமாக நினைப்பவர்கள் இணைய வசதியுடன் கூடிய வங்கிக் கணக்கு, கிரெடிட்/டெபிட் கார்டு இல்லாதவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். இணைக்கப்பட்டுள்ள படிவத்தை மேலே உள்ள வழிமுறைகளின்படி பூர்த்தி செய்து உங்கள் பகுதியில் உள்ள UTI அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை பணமாகவே செலுத்தலாம்.
விண்ணப்ப் படிவம் இவ்வலுவலகத்தில் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம்.


அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
இராசசேகர்.கு M. A., B. Ed.
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
திருவாரூர் மாவட்டம்.
9787764803.