இந்தியாவின் 3-ஆவது நேவிகேஷன் செயற்கைக்கோள்: ஐஆர்என்எஸ்எஸ்-1சி அக்.10-இல் விண்ணில் ஏவப்படுகிறது



ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்டில் பொருத்தப்படும் ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள்.

இந்தியாவின் 3-ஆவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து அக்டோபர் 10-ஆம் தேதி அதிகாலை 1.56 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி.யின் எக்ùஸல் வகை ராக்கெட் இந்த செயற்கைக்கோளை பூமியிலிருந்து அதிகபட்சம் 20,650 கிலோ மீட்டர் தொலைவும், குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோளைச் செலுத்தும்.

அங்கிருந்து செயற்கைக்கோளின் பாதை அதிகரிக்கப்பட்டு திட்டமிட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும்.

ஜி.பி.எஸ். அமைப்பு போன்று இந்தியப் பிராந்தியத்தில் கடல் வழி, தரை வழி, விமானப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் இந்திய நேவிகேஷன் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவுக்குள்ளும், இந்திய எல்லையிலிருந்து 1,500 கிலோமீட்டர் வரையிலும் தாங்கள் இருக்குமிடம் குறித்து இந்த வசதியைப் பயன்படுத்துவோர் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். அதோடு வாகனம் ஓட்டுவோருக்கு காட்சி வழியாகவும், ஒலி வழியாகவும் தகவல் வழங்கப்படும்.

இந்திய நேவிகேஷன் அமைப்புக்காக மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, ஐஆர்என்எஸ்எஸ்-1பி ஆகிய செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இப்போது மூன்றாவதாக ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள்: இந்தச் செயற்கைக்கோளில் உள்ள சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட கருவிகளின் மூலம் போக்குவரத்துக்கான சிக்னல்கள் வழங்கப்படும். தரையிலிருந்து ராக்கெட் கிளம்பும்போது செயற்கைக்கோளின் எடை 1,425 கிலோ ஆகும். இந்தச் செயற்கைக்கோள் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும்.

வாகனப் போக்குவரத்துக்கு உதவுவதோடு, பேரிடர் நிவாரணம், மலையேற்றம், வரைபடம் தயாரித்தல் போன்றவற்றுக்கும் இது உதவும்.

Post a Comment

12 Comments

  1. Replies
    1. இனிய காலை வணக்கம்...

      Delete
    2. Salary account எந்த பேங்க்ல Open பண்ணணும்.

      Delete
    3. Salary account எந்த பேங்க்ல Open பண்ணணும்.

      Delete
    4. State Bank of India ல் open பன்ன்ங்க சார்...

      Delete
  2. Gud mrng ,,,happy ayudha pooja & vijayadhasami

    ReplyDelete
  3. Salary account எந்த பேங்க்ல Open பண்ணணும்.

    ReplyDelete
  4. Salary account எந்த பேங்க்ல Open பண்ணணும்.

    ReplyDelete
  5. f a person join as BT with PG qualification , that person is eligible to write PG TRB EXAM or not ??? anyone reply pls.....

    ReplyDelete
    Replies
    1. பி ஜி டி.ஆர்.பி நிச்சயம் எழுதலாம் ஆனால் முறைப்படி சி.இ.ஓ யிடம் அனுமதி வாங்கியப்பின் எழுதலாம்...

      Delete
    2. thank you, sir

      Delete
  6. If a person join as BT with PG qualification , that person is eligible to write PG TRB EXAM or not ??? anyone reply pls.....

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..