நான் தான் கையெழுத்து டாக்டர்!


''உச்சிமுதல் உள்ளங்கால் வரை உங்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கு, உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்னு எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன். இதுக்கு மருந்தோ, ஜோதிடமோ தேவையில்லை. உங்க கையெழுத்து மட்டும் போதும்' என அதிரவைத்தார் வி.அருண். 

''நான்தான் கையெழுத்து மருத்துவர், கையெழுத்து ஜோதிடர், கையெழுத்து ஆலோசகர்...'' என கேப் விடாமல் ஆரம்பித்த இவருடைய சொந்த ஊர் சேலம். தான் படித்த 3,000 வகையான புத்தகங்களில் இருந்து கற்றுக் கொண்ட ஞானத்தால் 'கையெழுத்து’ விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தாராம். இவர் ஒரு முன்னாள் தலைமை ஆசிரியர்.

''உங்களுடைய லேட்டஸ்ட் கையெழுத்தை எனக்கு எழுதி அனுப்பினால் போதும், உங்க உடம்புல புரோட்டீன் அளவு எவ்வளவு இருக்குங்கிறதில்  ஆரம்பிச்சு, என்ன சாப்பிட்டீங்க? எவ்வளவு நேரம் தூங்கினீங்க? எதிர்காலத்துல நீங்க எப்படி இருப்பீங்கனு எல்லா விஷயத்தையும் அப்படியே புட்டுப்புட்டு வெச்சிடுவேன்.

 உலகத்துலேயே ஆளைப் பார்க்காம, அவருடைய கையெழுத்தை மட்டும் வெச்சுக்கிட்டு உடனடி பலன் சொல்ற ஒரே ஆள் நான் மட்டும்தான். கையெழுத்து மட்டுமில்ல... அவங்களோட மொபைல் நம்பரை வெச்சுக்கூட அவங்களோட எதிர்காலத்தைக் கணிச்சிடுவேன்'' என அடுத்தடுத்து ரணகளமான அறிமுகம் கொடுத்துத் தொடர்ந்தார்.
undefined
''ஒரு செல்போன் நம்பர் எழுதிக்கொடுத்தீங்கனா, அதை வெச்சு 120 வகையான பலன்களைச் சொல்லிடுவேன். ஆனா, அதை அவங்கவங்க கையெழுத்திலேயே எனக்கு எழுதி அனுப்பணும். உங்க செல்போன் நம்பர்களை வெச்சும், அதை நீங்க எப்படி எழுதுறீங்கங்கிறதைப் பொறுத்தும் பலன்களைச் சொல்லுவேன். 

உங்க கேரக்டர், உடல் உறுப்புகளோட இயக்கம் எப்படி, அவ்வளவு ஏன்... உங்களுக்குப் பிறக்கப்போற குழந்தை ஆணா, பெண்ணானுகூட கணிச்சுச் சொல்லிடுவேன். மருத்துவரீதியில் இது தண்டனைக்குரிய தவறுனு எனக்குத் தெரியும். ஆனா, நான் எண்களை வெச்சுதானே சொல்றேன். அதனால, யாருமே என்னைக் கைது பண்ண முடியாது'' எனச் சொல்லிவிட்டு, சத்தமாகச் சிரித்த அருண், ''கடைசியா ஒரு ரிக்வெஸ்ட்'' என்றார்.

''உங்க ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர்கள்... எல்லோருடைய பெயர்களையும் அவங்கவங்க கையெழுத்துல எனக்கு எழுதி அனுப்பச் சொல்லுங்க. 120 பலன்கள்ல முதல் 20 பலன்களை இலவசமா சொல்றேன்'' என்றார்.

Post a Comment

6 Comments

  1. please give me Mr.V.ARUN address

    ReplyDelete
  2. Lot of times i asked sir but no response. Paper 1 i losed in point difference .otherthen adw list any vacancy for paper 1.please tell sir

    ReplyDelete
    Replies
    1. CL RL INTHA MONTH EDUKKA MUDIYUMA MANI SIR, PLEASE REPLY . I JOINED 26 SEP 2014

      Delete
  3. Monday adw list kandippa varum sir.

    Ithu confrim news

    ReplyDelete
  4. Eni paper 1 bc,mbc ku chance elaiya sir! Extra vacancy paper1 ku eruka?elaiya ?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..