"பணியில் சேராத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு" - தினமணி
பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (ந.க.எண்: 025400, நாள் 15-10-14) கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடும், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணி நியமன ஆணை பெற்ற பல இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் இதுவரை பணியில் சேரவில்லை. அப்படி பணியில் சேராதவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காரணம் கேட்டு அறிவிக்கை அனுப்ப வேண்டும்.
அதன்பின்பும் 27-10-14-க்குள் பணியில் சேராவிட்டால் அவர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..