மற்ற நாடுகளின் தாக்குதலில் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. இது முப்படைகளில் ஒன்று. 1932ம் ஆண்டு அக்டோபர் 8ல் ஆங்கிலேயரால் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது.
இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.சுதந்திரம் பெறுவதற்கு முன் இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின் நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இப்போர்களில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. இயற்கை பேரழிவுகளின் போது, ஆபத்தான இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் இந்திய விமானப்படை இடம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படையில் 1,75,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1500க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது "பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் "வெஸ்ட்லேன்ட் வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிய படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் , சிறப்பு வாய்ந்த போர் விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு:

விமானப்படையில் டெக்னிக்கல், நான்- டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி, பிளையிங் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு, தகுதிக்கேற்ப பல்வேறு விதமான பணி வாய்ப்புகள் உள்ளன. எழுத்துத்தேர்வு, உடல் தேர்வு, நேர்முகத்தேர்வு, பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் விமானப்படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தகுந்த ஊதியமும் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து விமானப்படையில் சேர வேண்டும்.
சலுகைகள்:
விமானப்படையில் பணியாற்றுபவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவம், இன்ஸ்சூரன்ஸ், கடன்வசதிகள், உதவித்தொகை, கல்வி, குழந்தைகளுக்கு மருத்துவம், மூத்த குடிமகன்களுக்கு வீடு உள்ளிட்ட பல வசதிகள் விமானப்படையில் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது

1 Comments
அப்பிடியே புளியங்குடியில் ஒரு குண்ட போடா சொல்லுப்பா
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..