வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள்
குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்னரும் ஆறு வாரங்கள் முழுச் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும். 12 வாரங்களையும் சேர்த்து குழந்தை பிறந்ததும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
கருச்சிதைவு ஏற்பட்ட மகளிருக்கு, 6 வாரம் விடுப்பு தர வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும்போது பிரசவத்தினால் அல்லது கருச்சிதைவினால் பெண் ஊழியர் நோய்வாய்ப்பட்டால், அவருக்கு ஊதியத்துடன் கூடுதலாக ஒருமாத விடுப்பு தரவேண்டும்.
பிறந்த குழந்தைக்கு 15 மாதம் ஆகும்வரை பணியின் இடையில் இரண்டு முறை குழந்தையைக் கவனிக்கும் அவகாசம் தரவேண்டும்.
கர்ப்பிணி தொழிலாளரின் கடைசி மாதப் பணிகள் கடுமையாக இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தாயையும், குழந்தையையும் பாதிக்கிற எந்தவிதமான கடுமையான வேலையும் தரலாகாது.
பிரசவத்தின் போது பெண் ஊழியர் இறந்து விட்டால், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அவர் பணியாற்றிய அலுவலகம் ஆறு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்து விடுமானால், அந்தக் குழந்தை உயிரோடிருந்த வரையிலான காலத்திற்கு, தாய் பணியாற்றிய கம்பெனி தாய் பெற்று வந்த ஊதியத்தை வழங்க வேண்டும்.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..