அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தகவலை சிறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த ஜெயலலிதா திடீரென மயங்கி விழுந்ததாகவும். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று  நடைபெற்ற ஜாமீன் மனு விசாரணையை, கன்னட செய்தி தொலைக்காட்சி சேனலில் ஜெயலிலிதா நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தாகவும், அப்போது சசிகலா, இளவரசி ஆகியோருக்கும் கன்னட செய்திகளில் கூறப்படும் தகவல்களை மொழி மாற்றம் செய்து தெரிவித்ததாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.