திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து விழாக்களை காட்டிலும் கார்த்திகை தீப திருவிழா மிக
விமர்சையாக கொண்டாடப்படுகிறது.கார்த்திகை தீப திருவிழா இவ்வருடம்
டிசம்பர் மாதம் 5ம் தேதி 2014-ல்
கொண்டாடப்படுகிறது.இந்த திருவிழா கார்த்திகை
பிரம்மோட்சவம் என்றும் அழைக்கப்பட்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
10 நாட்கள்
நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில்முதல் நாள கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இதை
துவாஜரகோதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும் எடுத்து சொல்வது வழக்கமாக உள்ளது. மேலும் பஞ்ச மூர்த்திகளான கணபதி,
முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு
|
வாகனத்தில்
பஞ்சமூர்த்திகள் எடுத்துச்செல்லப்படுகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவின் இரண்டாம்
நாளில சந்திரசேகர பெருமானை சூரிய வாகனத்தில் எடுத்து
செல்வதில் துவங்கி இரவில் பெரியநாயகர்
பெருமானைஇந்திரவிமானத்தில்
(இந்திரதேவன் ரதத்தில்)ஊர்வலமாக எடுத்துச்செல்வதுடன் முடிகிறது.
கார்த்திகை
தீப திருவிழாவின் மூன்றாம் நாளில் பெரியநாயகர் பெருமான் சிம்ம வாகனத்தில் (சிங்க
தேரில்) ஊர்வலம் இரவில் தொடங்கும்.
நான்காம்
நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் காமதேனு வாகனத்தில்
ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது.
விருட்சம் தரும் கற்பக விருட்ச
மரமுடன் பவனி வருவார். இக்கற்பக
விருட்ச மரமானது வரும் பக்தர்களுக்கு
அவர்கள் பிராத்தனையை நிறைவேற்றும் என்பது மக்களிடையே நிலவும்
பரிபூரண நம்பிக்கை.
கார்த்திகை தீப திருவிழா ஐந்தாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக செல்வார். 25 அடியுள்ள இந்த வாகனம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த வாகனத்தில் 17 அடி கொண்ட அழகிய கொடையுடன் ஊர்வலம் செல்வது பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியை தரும்.
கார்த்திகை தீப திருவிழா ஐந்தாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக செல்வார். 25 அடியுள்ள இந்த வாகனம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த வாகனத்தில் 17 அடி கொண்ட அழகிய கொடையுடன் ஊர்வலம் செல்வது பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியை தரும்.
ஆறாம் நாள் கார்த்திகை திருவிழாவில் பெரியநாயகர் அலங்கரித்த வெள்ளி வாகனத்தில் ஊர்வலம்
செல்வதை பார்க்க பக்தர்கள் கூட்டம்
திரளாக காத்திருக்கும்.
ஏழாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் பெரியநாயகர்
பெருமான் மரத்தால் செய்யப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்ட அகலமான ரதத்தில் ஊர்வலமாக
செல்வார்.
கார்த்திகை தீப திருவிழாவின் எட்டாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வருவார். இந்த குதிரை வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் குதிரையின் நான்கு கால்களும் தரையை தொடாமல் ஆகாயத்தில் மிதக்கும். இதை மக்கள் வியப்புடன் பார்க்க காத்திருப்பார்கள்.
கார்த்திகை திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெரியநாயகர் கைலாச வாகனத்தில் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வூர்வலம் பெரும்பாலும் இரவில் நடப்பது வழக்கம்.
கார்த்திகை தீப திருவிழாவின் எட்டாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வருவார். இந்த குதிரை வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் குதிரையின் நான்கு கால்களும் தரையை தொடாமல் ஆகாயத்தில் மிதக்கும். இதை மக்கள் வியப்புடன் பார்க்க காத்திருப்பார்கள்.
கார்த்திகை திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெரியநாயகர் கைலாச வாகனத்தில் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வூர்வலம் பெரும்பாலும் இரவில் நடப்பது வழக்கம்.
பத்தாம்
நாள் கார்த்திகை தீப திருவிழாவின் அதிகாலை
நான்கு மணிக்கு தொடங்கி கோயிலில்
பரணி தீபம் ஏற்றப்படும். மாலை
ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா
தீபம் தீபம் ஏற்றப்படும். இத்தீபம்
அருணாச்சலேஸ்வரரின் உருவத்தை குறிப்பதால் உலகம் எங்கும் உள்ள
பக்தர்கள் இக்காட்சியை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இரவில் பெரியநாயகர் பெருமான் தங்கத்தால் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறார். இதை காண மக்கள் திரளாக காத்திருக்கிறார்கள். இந்த தரிசனம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது.
இரவில் பெரியநாயகர் பெருமான் தங்கத்தால் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறார். இதை காண மக்கள் திரளாக காத்திருக்கிறார்கள். இந்த தரிசனம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது.
கார்த்திகை தீப திருவிழாவின் பதினொன்னாம் நாள் அருணாச்சலேஸ்வரர் தெப்ப குளத்தில் தெப்பத்தில் வருவது தெப்பத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் பன்னிரெண்டாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறுகிறது. இதை கிரி பிரதட்சனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவுடன் கார்த்திகை தீபவிழா இனிதே முடிவடைகிறது. பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் திருவருளை பெற்று மன நிறைவுடன் அவர்கள் ஊரை நோக்கி திரும்பி செல்கின்றனர்.
17 Comments
Nandri Suruli Vel Sir.
ReplyDeleteIniya deepa thirunal nalvalthukkal...
enjoy the day
ReplyDeleteபிறவா நிலையை அடைய சிவாயநம என்போம்.
ReplyDeleteஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.
தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ReplyDeleteஎதை எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
அன்னதானம்: வறுமையும், கடன்களும் நீங்கும்.
பூமிதானம்: பிரம்ம லோகத்தையும் ஈசுவர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்: ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும். வஸ்திரதானம்: ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்: கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம்: புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்: பாவங்களை போக்கும்.
தயிர் தானம்: இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்: நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்: ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்: துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்: பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்: குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும்.
வெள்ளி தானம்: மனக்கவலை நீங்கும்.
பழங்கள் தானம்: புத்தியும் சித்தியும் தரும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
தானம் , தர்மம் , மற்றவர்களுக்கு செய்யும் ஒவ்வொரு நன்மையும் உங்களக்கு நற்பலனை (நன்மையை ) கொண்டு வந்தே தீரும் ...
Amazing information sir . about shivaayanama...
ReplyDeleteHappy deepam festival jayaram sir ..
Thanx mam, ippave maadiku vandhutinga poliruku deepam eatruvadhai parka, unga arvathirku alve illaya?
DeleteMy Wife DOES NOT WORK !!!
ReplyDeleteConversation between a Husband (H) and a Psychologist (P):
🔸P : What do you do for a living Mr. Bandy?
🔹H : I work as an Accountant in a Bank.
🔸P : Your Wife ?
🔹H : She doesn't work. She's a Housewife only.
🔸P : Who makes breakfast for your family in the morning?
🔹H : My Wife, because she doesn't work.
🔸P : At what time does your wife wake up for making breakfast?
🔹H : She wakes up at around 5 am because she cleans the house first before making breakfast.
🔸P : How do your kids go to school?
🔹H : My wife takes them to school, because she doesn't work.
🔸P : After taking your kids to school, what does she do?
🔹H : She goes to the market, then goes back home for cooking and laundry. You know, she doesn't work.
🔸P : In the evening, after you go back home from office, what do you do?
🔹H : Take rest, because i'm tired due to all day works.
🔸P : What does your wife do then?
🔹H : She prepares meals, serving our kids, preparing meals for me and cleaning the dishes, cleaning the house then taking kids to bed.
💯✔Whom do you think works more, from the story above???
🔱The daily routines of your wives commence from early morning to late night. That is called 'DOESN'T WORK'??!!
🎋Yes, Being Housewives do not need Certificate of Study, even High Position, but their ROLE/PART is very important!
💝Appreciate your wives. Because their sacrifices are uncountable. This should be a reminder and reflection for all of us to understand and appreciate each others roles.
🎏All about a WOMAN ....
💛When she is quiet, millions of things are running in her mind.
💙When she stares at you, she is wondering why she loves you so much in spite of being taken for granted.
💜When she says I will stand by you, she will stand by you like a rock.
💚Never hurt her or take her wrong or for granted...
↪Forward to every woman to make her smile.
❤💚💜💙💛💖
well said
Deleteஇப்போது என்னிடம் வாங்கி கொண்டிருக்கும் புத்தகம் முதலில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கவில்லை. கடந்த 2012 டெட் தேர்வு முடிந்த பின் டெட் தேர்வு மீண்டும் வருமா என்ற கேள்வி எழுந்தது. முதல் டெட் தேர்வு 66 மதிப்பெண் இரண்டாவது டெட் தேர்வு 78 மதிப்பெண் எடுத்தேன். இந்த இரண்டு தேர்விலும் எப்படி படிப்பது எது வரை படிப்பது என்பது எனக்கு தெரியவில்லை
ReplyDeleteஆனால் இரண்டு தேர்வுகளும் எப்படி படிப்பது எதை படிப்பது என்ற பாடத்தை கற்று கொடுத்தது. ஆனால் தேர்வு மீண்டும் வரும் வராது என்பதை பற்றி கவலை படாமல் ஒவ்வொரு வகுப்பாக தயார் செய்தோம் தினமும் தேர்வுகள் எழுதினோம். குறிப்பிட்ட வகுப்பை முடித்தபின் டெட் தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கபடுகின்றன அப்படியென்றால் ஏன் நாம் புத்தகத்தின் அனைத்து வரிகளையும் கேள்விகளாக மாற்ற கூடாது என்ற எண்ணம் உதித்தது அதை செயல்படித்தினோம்.
நான் வேலை செய்து கொண்டு தான் படிக்கும் நிலை. என்னால் வேலையை விட முடியவில்லை குடும்ப சூழ்நிலை அப்படி.ஒவ்வொரு நாளும் நான் தூங்கியது வெறும் மணி 4 நேரம் தான். ஆனால் என்னால் தமிழ் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே தயார் செய்ய முடிந்தது. மற்ற இரண்டு பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏனென்றால் நேரம் இல்லை.இந்த இரண்டு பாடங்களில் நம்மை மீறி எந்த கேள்வியும் வர கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இறுதியில் நல்ல மதிப்பெண் பெற்றோம். அவ்வாறு உருவாக்கிய பேப்பர் எல்லாத்தையும் சும்மா ஒரு இடத்தில் வைத்து பார்க்க மனமில்லை. நான் கஷ்ட பட்டு எனக்காக உருவாக்கியதை உங்களுக்கு கொடுக்கிறேன் இது முழுவதும் புத்தகமாக மட்டுமே என்னிடம் கிடைக்கும் என்னுடைய தொடர்பு எண் 9976715765
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.
ReplyDeleteமூவருக்கும்
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார்.
அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி
முதலாவது மகள் மற்றும் மருமகனுடன்
ஒரு ஏரியில் படகு சவாரி
செய்தார்.
தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.
இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.
அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.
இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.
அவரும் முதல் மருமகனைப் போலவே
செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.
முன்றாவது மருமனுக்கும் இதே சோதணை.
திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை
மாமியார் கெஞ்சினார்.
ம் ஹும்.
பார்க்காதது போல் இருந்தார்.
மாப்பிள்ளை காப்பாற்றுங்கள் இன்னோவா கார்
வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.
காரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்
புள்ள வளர்திருக்கிறா பார்...புள்ள...ன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....
ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது.
அருகில் சென்று பார்த்தால்.. .............
மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.
FUNNY INTERVIEW👌👍
ReplyDeleteOfficer : What Is Your Name ?
Candidate : M P. Sir.
Officer : Tell Me Properly.
Candidate : Muthu Pandi Sir.
Officer : Your Father's Name ?
Candidate : M P. Sir.
Officer : What Does That Mean ?
Candidate : Muruga Pandi Sir.
Officer : Your Native Place ?
Candidate : M P. Sir.
Officer : Is It Madhya Pradesh ?
Candidate : No, Madurai Pakkam Sir.
Officer : What Is Your Qualification ?
Candidate : M P. Sir.
Officer : (Angrily)😠What Is It ?
Candidate : Matriculation Pass Sir.
Officer : Why Do You Need A Job ?
Candidate : M P. Sir.
Officer : And What Does That Mean ?
Candidate : Money Problem Sir.
Officer : Describe Your Personality ?
Candidate : M P. Sir.
Officer : Explain Yourself Clearly..
Candidate : Mindblowing Personality Sir.
Officer : This Discussion Is Now over, 😥You May Go
Now....😐
Candidate : M P. Sir.
Officer : huh..What Is It Now ??
Candidate : My Performance Sir.
Officer : M P. da
Candidate : 😳What Is That Sir. ....??
Officer : Muddikittu Poda ..😡
Candidate: M P. Sir.
Officer : 😯Now What Is Thissss ????
Candidate: My Pleasure Sir.
😝😆😆😝😂😂😝😆😆😝😂
gd nt
Sudha mam ippodhavadhu visit panunga, tvmalai vandhavanga ellam avanga avanga ooruku poitanga so ungalai yarum endha hlp um ketkamatanga
ReplyDeleteவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...
ReplyDeleteவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்..
2050 தமிழகம் ஒரு கற்பனை
ReplyDeleteசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 100-வது வயதை முன்னிட்டு பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அரசியலுக்கு வருவது பற்றி தெளிவான ஒரு முடிவு எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை ‘கேப்டன்’ விஜயகாந்த் கண்டுப்பிடித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.
உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது.
நாளை முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000, 20,000, 50,000 ரூபாய் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி.
எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம்.
அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு.
தாது மணல் விவகாரம் குறித்து ‘சகாயம்’ ஐ.ஏ.எஸ் அறிக்கையின் மீதுள்ள விசாரணை ஒத்திவைப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுப்பிடிப்பு.
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
ReplyDeleteதென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.
தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.
இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும். 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.
இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். திலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
Deleteமிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.
1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது ய அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.
ஏனிந்த என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.
இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு...
Good afternoon jayaram sir..
ReplyDeleteVery wonderful experience sir. Deepam vaikkum pothu ellarum madi Ku vanthu deepam pathu poojai panni athukku appuram viratham finish pannitu.. Giri valam ponanga..intha poojai pannarathu ellam inga vanthu than therinjuten.. Neenga madi Ku ippave vanthutengala nu comment pan um pothu purila enakku. But appuram patha hyyo ellarum vanthu samy pray pannanga..
Nanga enga oorula just deepam vaikarathoda sari..
Ithu nalla experience sir.. I won't forget in my life....
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..