ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து

"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில்,
குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. 

பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

8 Comments

  1. டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

    மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

    டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

    மாணவன்: ஆமா டீச்சர் ... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை....

    டீச்சர் : வொய்????

    மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது....

    டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

    மாணவன்: இல்ல டீச்சர் .... குளிக்கல்ல.... எப்பிடிப் போறது?

    டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

    மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல....

    டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும...

    மாணவன்: டீச்சர், லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர்... அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு....

    ReplyDelete
  2. No matter how you feel, Get up, dress up, show up and never give up.
    கூட்டம் போட்டு தெரிச்சு ஓடுற புறா இல்லை நாங்கள்,
    நின்று நிதானமா வேலைய தூக்குற கழுகு நாங்கள்.

    I feel sorry for the teachers who are spending their days worthless with some selfish agitators

    ReplyDelete
  3. ஜயா கொடபுடிச்சிட்டு போற பெரியவரே வணக்கமுங்க

    ReplyDelete
  4. ஆசிரியர்


    நான்குகால்
    ஆசனத்தில்
    அமர்ந்திருக்கும்
    மாண்புள்ள
    நூல்


    கருணையிலும்
    கண்டிப்பிலும்
    கணக்குப்பார்க்காத
    கருவூல அமைச்சர்


    எதிர்கால
    தூண்களின்
    நிகழ்கால
    நிலம்

    அன்னை
    தந்தை
    தெய்வம்

    இம்மூன்றின்
    பிணைப்பு

    நாம்
    நாம் தான்
    நாம் மட்டும் தான்.

    -------------------+-------------------------

    ReplyDelete
  5. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராடுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

    ReplyDelete
  6. See the link: Court will be disposed 5% relaxation case....

    http://www.thehindu.com/news/national/kerala/supreme-court-upholds-changed-net-criteria/article5147670.ece

    ReplyDelete
  7. உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,

    (தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
    நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..

    செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..