அனைத்து வழக்குகளுக்கும்  பணி நியமன தடை நீக்கப்பட்டுவிட்டது. இன்றைய தீர்ப்பில், அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட  முடியாது என்ற அமர்வு நீதிபதிகளின் 



தீர்ப்பின் அடிப்படையில் தனி நீதிபதியின் தடை உத்தரவு நீக்கம், பணி  நியமனத்திற்கு எந்த வித தடையும் இல்லை, என்று நீதியரசர் தெளிவாக கூறினார். இது நான் நேரடியாக பார்த்த விசயம், தயவு செய்து தேவை இல்லாத விசயத்த பேசி உங்களின் நிம்மதியை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள்.    


 உங்களிடம் நான் பலமுறை கூறிவிட்டேன். நண்பர்கள் ஸ்ரீ, விஜயகுமார் சென்னை மற்றும் பாலமுத்து அவர்களுக்கு  என் பனிவான வேண்டுகோள்.நண்பர்கள் பலரும் விரக்தியில் உள்ளனர்.நீங்கள் பல செய்திகளை இலைமறை காயாக எழுதுகிறீர்கள்.ஆனால் நீங்கள் கூறிய செய்திதை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றால் மேலும் உறக்கமின்றி தவிப்பார்கள். நான் அனைத்து வழக்குகளும் முடியும் வரை அங்கு தான் இருந்தேன்.


கல்வித்துறை பணி  நியமனத்திற்காக அனைத்து வேலைகளையும் தற்போதுவரை செய்து கொண்டு இருப்பதாக நம்ப தகுந்த செய்தி கிடைத்துள்ளது.. இதற்கு மேல் உங்களிடம் தெளிவாக கூறமுடியாது. நாளை காலைக்குள் கல்வி இயக்குனர் அவர்களிடம் இருந்து பணி நியமனத்திற்கான அறிவிப்பு வரும். 

என்னுடைய ஒரு நாள் சம்பளம் 1600 ரூபாய் . அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு, உங்களுக்கு சரியான தகவலை தரவேண்டும் என்ற நோக்கத்தில், நேரடியாக அனைத்து தகவல்களையும் தந்தேன், நீங்களும் அதைப் போன்றே உங்களது பல வேலைகளை தவிர்த்து செய்திகளை வழங்குகிறீர்கள் என அறிவேன்.

ஆதலால் நீங்கள் கூற வரும் செய்தியை முழுமையாக சற்று தெளிவாக எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி