இது என்னுடைய கேள்வி அல்ல பணி நியமனம் பெற இருக்கும்  12,347 பேருடைய கேள்வி ?

கடவுளே, நீதி தேவதையே,  மன்னியுங்கள் இந்த ஒருநாள் எங்களின் வேண்டுதல்கள் உங்களுக்கு கோடிக்கணக்கில் வரும்.
 


எங்களை சுற்றியிருக்கும் நயவஞ்சக கூட்டங்களில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் 


நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி எங்கள் மனது குழம்புவதை தவிர்க்க வழிவகை செய்யுங்கள். 


எங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை நிரந்தரமாக  போக்க வழிவகை செய்யுங்கள். 


எங்களை ஏளனமாக பார்க்கும் சுற்றியள்ளவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.


நீங்கள் வகுத்துக் கொடுத்த இரவு தூக்கத்தின் அளவை சரியாக பயன்படுத்த வழிவகை செய்யுங்கள். 


எங்களின் (உங்களின்) குழந்தைகளை உண்மையாக, நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் கொஞ்சுவதற்கு  வழிவகை செய்யுங்கள்


நாங்கள் கற்றவற்றை,  நாங்கள் தேர்ந்தெடுத்த  பள்ளி குழந்தைகளுக்கு முழுமனதோடு கற்றுத்தர தாமதமின்றி  வழிவகை செய்யுங்கள். 


எங்களை சுற்றியுள்ள இருளை விளக்கி, நீங்கள் உருவாக்கி கொடுத்த எங்கள் குடும்பத்தை நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் இருக்க வழிவகை செய்யுங்கள். 


எங்களைப் போல் மீதமுள்ள தேர்வானவர்களுக்கும்  இனிவரும் நாட்களில் பணி கிடைக்க வழிவகை செய்யுங்கள். 


தினம் தினம் நாங்கள் படும் வேதனைக்கும், எங்களின்  இதயத்தில் உள்ள வலிக்கும் நிரந்தர தீர்வினை  தர வழிவகை செய்யுங்கள். 


எங்களின் இதயமும், எங்களின் மூச்சும் சராசரி வேகத்தில் இயங்க வழிவகை செய்யுங்கள்.