அவர் பெயர் ஜார்ஜ் கூரூனிஸ் (George Kourounis). யாரும் செல்லத் துணியாத
இடங்களுக்குச் சென்று சாதனை புரிவது தான் அவருடைய தொழில். சில நாட்களுக்கு
முன்பு அவர் எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார்.
குனிந்து பார்த்தால் சுமார் 370 மீட்டர் ஆழமான கிடுகிடு பள்ளம். அதன் அடியில் தள தள என்று கொதிக்கும் நெருப்புக் குழம்பு. அந்த எரிமலைக் குழம்பின் வெப்பம் 1200 டிகிரி செண்டிகிரேட். எனவே கடும் அனல். நடு நடுவே எரிமலைக் குழம்பு சீறுகிறது. நெருப்பு உருண்டைகள் தூக்கியடிக்கப்படுகின்றன.
நெருப்புக் குழம்பிலிருந்து ஆபத்தான குளோரின் வாயு, கந்தக வாயு ஆகியன
வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளேயிருந்து எரிமலைச் சாம்பலும் மெல்லிய
புகை போல மேல் நோக்கி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் எரிமலை வாய்க்குள் இறங்குவது என்பது மிக ஆபத்தான செயல்.
பசிபிக் கடலின் தென் பகுதியில் வனூவாடு (Vanuatu) என்ற தீவு நாடு உள்ளது. சின்னச் சின்னதாக மொத்தம் 80 தீவுகள். அவற்றில் 20 தீவுகளில் ஆளே கிடையாது. வனூவாடு நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரை லட்சம்.
இந்தத் தீவுகளில் ஒன்றான அம்ரிம் தீவில் தான் பெரிய எரிமலை உள்ளது. 12 மீட்டர் அகலம் கொண்ட அந்த எரிமலை வாய்க்கு மாரும் என்று தனிப் பெயர் உண்டு.
ஜார்ஜ் கூரூனிஸ் இந்த எரிமலை வாய்க்குள் தான் இறங்கினார். முதலில் கரடு
முரடான் எரிமலைச் சரிவு வழியே மேலே ஏற வேண்டும். அதன் பிறகு தான் உள்ளே
இறங்க வேண்டும்.
ஜார்ஜ் கூரூனிஸ் எரிமலைக் குழம்பின் வெப்பம் தாக்காதபடி இருக்க விசேஷ
காப்பு உடை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கு காற்றை அளிப்பதற்கான சுவாசக்
கருவியையும் அணிந்திருந்தார். கால் தவறினால் ஆபத்து என்பதற்காக இடுப்பில்
கம்பி இணைப்பு இருந்தது.
எரிமலைக் குழம்பைக் கண்டு பயம் இல்லையா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. எனக்கு மழையைக் கண்டுதான் பயம் என்றார் அவர்.
அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் உண்டு. எரிமலை வட்டாரத்தில் மழை பெய்யுமானால் எரிமலையிலிருந்து கிளம்பும் ஆபத்தான வாயுக்கள் மழை நீருடன் கலந்து அதன் விளைவாகக் கடும் அமில மழை பெய்ய ஆரம்பிக்கும். அமில மழையானது அவர் அணிந்த காப்பு உடைகளை அரித்து விடும். அமில மழையானது உலோகங்களையும் அரித்து விடக்கூடியவை. வெறும் தூறல் இருந்தாலும் ஆபத்து தான்.
ஜார்ஜ் புரிந்த சாதனை மெச்சத்தக்கது என்பது ஒரு புறம் இருக்க, அவர் உள்ளே இறங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் எரிமலையின் உட்புறத்தை நாம் காண்பதற்கு அரிய வாய்ப்பை அளித்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஜார்ஜ் கூரூனிஸுடன் சென்ற காஸ்மான் என்ற போட்டாகிராபர் தான் அப்படங்களை எடுத்தவர்.
கனடாவைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஏற்கெனவே மூன்று ஆபத்தான எரிமலைகளின் வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார். புயல்களும் அவருக்குப் பிடிக்கும். பல கடும் புயல்களின் நடுவே இருந்து படம் எடுத்துள்ளார்.
you tube காணொளி
.
குனிந்து பார்த்தால் சுமார் 370 மீட்டர் ஆழமான கிடுகிடு பள்ளம். அதன் அடியில் தள தள என்று கொதிக்கும் நெருப்புக் குழம்பு. அந்த எரிமலைக் குழம்பின் வெப்பம் 1200 டிகிரி செண்டிகிரேட். எனவே கடும் அனல். நடு நடுவே எரிமலைக் குழம்பு சீறுகிறது. நெருப்பு உருண்டைகள் தூக்கியடிக்கப்படுகின்றன.
பசிபிக் கடலின் தென் பகுதியில் வனூவாடு (Vanuatu) என்ற தீவு நாடு உள்ளது. சின்னச் சின்னதாக மொத்தம் 80 தீவுகள். அவற்றில் 20 தீவுகளில் ஆளே கிடையாது. வனூவாடு நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரை லட்சம்.
இந்தத் தீவுகளில் ஒன்றான அம்ரிம் தீவில் தான் பெரிய எரிமலை உள்ளது. 12 மீட்டர் அகலம் கொண்ட அந்த எரிமலை வாய்க்கு மாரும் என்று தனிப் பெயர் உண்டு.
எரிமலைக் குழம்பைக் கண்டு பயம் இல்லையா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. எனக்கு மழையைக் கண்டுதான் பயம் என்றார் அவர்.
அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் உண்டு. எரிமலை வட்டாரத்தில் மழை பெய்யுமானால் எரிமலையிலிருந்து கிளம்பும் ஆபத்தான வாயுக்கள் மழை நீருடன் கலந்து அதன் விளைவாகக் கடும் அமில மழை பெய்ய ஆரம்பிக்கும். அமில மழையானது அவர் அணிந்த காப்பு உடைகளை அரித்து விடும். அமில மழையானது உலோகங்களையும் அரித்து விடக்கூடியவை. வெறும் தூறல் இருந்தாலும் ஆபத்து தான்.
ஜார்ஜ் புரிந்த சாதனை மெச்சத்தக்கது என்பது ஒரு புறம் இருக்க, அவர் உள்ளே இறங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் எரிமலையின் உட்புறத்தை நாம் காண்பதற்கு அரிய வாய்ப்பை அளித்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஜார்ஜ் கூரூனிஸுடன் சென்ற காஸ்மான் என்ற போட்டாகிராபர் தான் அப்படங்களை எடுத்தவர்.
கனடாவைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஏற்கெனவே மூன்று ஆபத்தான எரிமலைகளின் வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார். புயல்களும் அவருக்குப் பிடிக்கும். பல கடும் புயல்களின் நடுவே இருந்து படம் எடுத்துள்ளார்.
you tube காணொளி
2 Comments
உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,
ReplyDelete(தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..
செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா
Y feel t same feel also me
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..