கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித்துறை:

இதேபோல், பள்ளி துப்புரவாளர் பணியிடமும், கணிசமான எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், கல்வித்துறை வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து, அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை எனில், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; அதிக கல்வித்தகுதி எனில், வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், மாவட்ட அளவிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கும். இது குறித்த, விரிவான வழிகாட்டுதல் அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கடும் போட்டி:

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கலாம் என்பதால், இந்த பணிக்கு, கடும் போட்டி ஏற்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை, 50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்பதால், கிட்டத்தட்ட பதிவு செய்தோர் அனைவ ருமே போட்டியில் இருப்பர். பதிவு மூப்பு அடிப்படையில் பார்த்தாலும், இந்த பணியைப் பெற பல லட்சம் பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த பணியைப்பெற கடும் முயற்சியை மேற்கொள்வர் என தெரிகிறது.

Post a Comment

9 Comments

  1. திரு அட்மின் அவர்களுக்கு ஒரு பணிவான கோரிக்கை நமது மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் தடைகளை வெல்ல அவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் எந்த வித கருத்துக்களையும் அனுமதிக்காமல் அம்மாவுக்கு ஆதரவு தெரிவியுங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எங்களை போன்று தேர்வு பெறாதவர்களுக்கு அடுத்த பட்டியலில் முன்னுரிமை அளிக்க அம்மா உதவுவார்கள் எங்களின் நலனுக்காக தயவு செய்து இதற்கு உதவுங்கள்

    தேர்வு பெற்ற நண்பர்கள் அம்மா உங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் அவர்களுக்காக இதனை செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..:-)
      வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..:-):-):-):-):-)

      Delete
  2. சாரதா வைத்யநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் என்கிற போர்வையில், தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்களை பற்றி நினைத்தாலே, அருவருப்பாய் இருக்கிறது.இந்த வரைமுறை இல்லா வன்முறையில், நமக்கு புரியாத சில விஷயங்கள் பற்றி, ஆளுங்கட்சியிடமே சில சந்தேக கேள்விகள்:*ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், உங்களுக்கு யார் மீது கோபம்? தீர்ப்பை கொடுத்த நீதிபதி மீதா அல்லது வழக்கை தொடுத்தவர் மீதா?*உங்கள் தலைவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால், தலை கால் புரியாமல் கோபத்தை காட்ட வேண்டும் என, யார் உங்களுக்கு உத்தரவிட்டது?*வழக்கை, வெள்ளி விழா காண வழிவகுக்காமல், 18 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுள்ளதால், உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதா?*பொய் வழக்கு என ஒப்பாரி வைக்கிறீர்கள்... இதை பொய் வழக்கு என்று, பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... அப்படிப்பட்ட பொய் வழக்கை உடைத்தெறிந்து, தகுந்த ஆவணங்களை கொடுத்து, வழக்கை வெற்றி கொள்ள உங்களுக்கு துப்பு இல்லாமல் போனது எதனால்?*அரசு, தனியார் சொத்துகளை அழிக்கும் தைரியம், உங்களுக்கு எப்படி வந்தது? அன்று, பா.ம.க.,வினர் அழித்த அரசு சொத்திற்கான இழப்பை, அக்கட்சி தான் ஈடு செய்ய வேண்டும் என, நீங்கள் பேசிய நியாயம், இன்று உங்களுக்கும் பொருந்துமா?*வழக்கு செல்லும் பாதையை சரி வர நோக்காமல், ஜெ., விடுதலையாகி விடுவார் என, மனக்கோட்டை கட்டி, லட்டு மற்றும் பட்டாசுகளை, பெங்களூருக்கு எடுத்துச் சென்ற, உங்கள் அறியாமையை கண்டு பாவமாகத் தான் இருக்கிறது. நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு, தமிழகத்தை வதைப்பது, எவ்விதத்தில் நியாயம்?*ஜெயலலிதா கைதான பின், உங்கள் கட்சியின் எந்த இரண்டாம் கட்டத் தலைவரும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என, கேட்டுக் கொள்ளவில்லை. இந்த வழக்கிற்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?பதில் சொல்லுங்கள்! இன்றைய தினமலர் "இது உங்கள் பக்கம்" ல் கண்டது .....

    கடும் மன உளைச்சலை தற்போது கட்சி பேதமற்ற சராசரி பொது மக்கள் & வியாபாரிகள் அனுபவித்து வருகின்றோமே ... அது உங்கள் கண்களுக்கு தெரியாதோ ??? முன்னாள் முதல்வரின் பெயரை கெடுக்கும் செயல்பாடுகளை செய்யும் நபர்களை ,அவர் வெளிவந்த உடன் "தனி கவனிப்பு" உண்டு என்பதை மறவாதீர்கள்....

    ReplyDelete
  3. தயவு செய்து தடை செய்யுங்கள்

    ReplyDelete
  4. இனிய மாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. அம்மா அவர்களைபற்றி அறிவோம்

    ஜெயலலிதா அவர்கள் 1948 ல் மைசூரில் ஜெயரமானுக்கும் சந்தியா அம்மாவிற்க்கும் மகளாக பிறந்தார்..சிறு வயது முதலே தனது தாய் சென்னையில் நடித்துக்கொண்டு இருந்ததால் இவர் சென்னையிலேயே
    படித்தார்,,,மெட்ரிக் தேர்வில் மாநில தென் இந்திய அளவில் முதலிடம் பெற்றார்,, அறிஞர் அண்ணா ஜெயலலிதா அமெரிக்காவில் படிக்க இலவச ஏற்பாடு செய்தார்,,,அதன்படி படித்துவிட்டு தாயகம் திரும்பினார்,,,சிறு வயது முதலே நாட்டியத்தில் தேர்ச்சி பெற்று விளங்கினார்,,பின் நடிப்பில் முத்திரை பதித்தார்,. சிறுவயதிலே செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர். 10 மொழிகள் பேசும் எழுதும் ஒரே அரசியல் தலைவர் இவரே...
    சமூக நல திட்டங்கள்:-
    இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கொண்டு வாராத பல ஆயிரம் திட்டங்களை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்து வைத்து அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டங்களே தமிழ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் பிற மாநிலங்கள் காப்பி அடிக்கின்றன..அதில்
    -தொட்டில் குழந்தை திட்டம்
    -அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசம்
    -பள்ளியில் இன்று செயல்படுத்தும் பல்லாயிரம் திட்டங்கள்
    -வறுமை கோடு மக்களுக்கு ஆடு மாடு
    -பசுமை இல்ல வீடு
    -கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
    -அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்பு, சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை, பஸ்பாஸ், சைக்கிள், விதவிதமான கலவை சத்துணவு
    -2011 ல் 40%இருந்த மின்வரத்து 2014 88% தன்னிரைவு பெற்றது
    -விசன் 2023
    அண்டை மாநில பிரச்சனைகள்:-
    ஜெயலலிதா ஒரு கன்னட பிராமீனாக இருந்தாலும்,,,1995 ல் தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவிற்க்கு எதிராக நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து காவிரி நீரை பெற்று காவிரித்தாய் ஆனார்,,,
    பின் 2014 ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதலில் வெளியிட்டு சாதனை புரிந்தார்.
    -கேரள முல்லை பெரியாறு உரிமையை தமீழகத்திற்க்கு மீட்டு தந்தார்,,
    இலங்கை தமிழர் பிரச்சனை:-
    தமிழ் நாட்டில் இலங்கை தமிழருக்கு தேவையான சட்டங்கள்,,,ஈழம் கோரிக்கை,,ஐநா விசாரனை,,போன்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்..
    ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்,,,
    பெண்கள் திட்டங்கள்:-
    மகளிர் சுய உதவிக்குழு
    தாலிக்கு தங்கம்
    முதியோர் பென்ஷன் உயர்த்தியது
    33% இட ஒதுக்கீடு
    குடும்ப அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசம்,,,,
    போன்ற பல்வேறு திட்டங்கள்.
    அம்மா உணவகம்
    மினிப் பேருந்து
    அம்மா மருந்தகம்
    அம்மா குடிநீர்
    அம்மா உப்பு
    அம்மா சிமெண்ட்
    அவசர மருத்துவ உதவி 104
    மருத்துவமனைகள் தன்னிகரில்லா தரம் உயர்வு
    இப்படி எண்ணற்ற திட்டங்களின் நாயகி,
    துணிச்சலான பெண்சிங்கத்தை அரசியல் எதிரிகளின் காழ்ப்புணர்ச்சி பேரிருளில் தள்ளியது...


    நன்றி
    மடிப்பாக்கம் பாண்டியராஜன் பதிவுகள்

    ReplyDelete
  6. உண்மை தன்மை சான்றிதழ் பெறும் முறை பற்றி வெளியிடுங்கள் அட்மின் அவர்களே ...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..