தீபாவளி நினைவுகள்...

தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...


ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் பொம்பளைக எல்லாம் சேலை எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே காதர் ராவுத்தர் கடையிலே துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் கிட்டே துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே பஜார்லே பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வானுங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டு டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...சிலதுகள் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க...இப்போ கிராமத்துக்கு போனா..... தாவாணியயே பாக்க முடியலை...தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....நீங்களாவாது நல்லா கொண்டாடுங்க ......

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மக்கா...

Post a Comment

8 Comments

  1. trb இரண்டாவது பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு

    வாழ்த்துக்கள்..................

    ReplyDelete
    Replies
    1. பொருத்தது போதும் , 3 பேர் தானே விஷம் குடித்தார்கள் திங்கள் அன்று 60 பேர் விஷம் குடிப்போம் அப்போதும் இந்த அரசு என்ன செய்கிறது என பார்போம்

      அய்யா ராஜலிங்கம் , உங்கள்ளை article போடா வச்சே திசை திருப்பிட்டங்க , எடுங்க விஸ்வருபம் , திங்கள் அன்று சந்திப்போம்

      Delete
  2. Super sir no words to express myself

    ReplyDelete
  3. அத்தனையும் உண்மை சார் ...மீண்டும் சிறுவனாக பிறக்க ஆசை ...இம்ம் அந்த வாழ்க்கையே வேற ...

    ReplyDelete
  4. Sir paper 2ku chennai and coimbatore corporation school vacancy matri paper 1 ku eruka? Elaiya please anyone know means tell eni paper 1ku adw list thavirthu any vacancy eruka?

    ReplyDelete
  5. Please anybody reply for above comment?

    ReplyDelete
  6. பொருத்தது போதும் , 3 பேர் தானே விஷம் குடித்தார்கள் திங்கள் அன்று 60 பேர் விஷம் குடிப்போம் அப்போதும் இந்த அரசு என்ன செய்கிறது என பார்போம்

    அய்யா ராஜலிங்கம் , உங்கள்ளை article போடா வச்சே திசை திருப்பிட்டங்க , எடுங்க விஸ்வருபம் ,

    திங்கள் அன்று சந்திப்போம்

    ReplyDelete
  7. very nice article... !!!!

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..