போராட்டக்குழுவிற்கு  தலைமை தாங்கி போராட்டத்தை முன்னின்று தலைமை தாங்கி நடத்துபவர் திரு.செல்லத்துரை அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்.

பெயர்:செல்லத்துரை

பால்:ஆண்

வயது:30லிருந்து 33 க்கு உள்ளாக

TET மதிப்பெண் :110

பாடப்பிரிவு:ஆங்கிலம்

வகுப்பு:OC(other community)

மாவட்டம்:சேலம்:

வட்டம்:ஆத்தூர்

ஊர்:வீரகனூர்

அனுபவம்:தனியார் கல்லூரி ஒன்றில் சில ஆண்டுகால ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

ஏன் போராட்டம்?

ஆங்கிலப்பாடப் பிரிவில் 2800 பணியிடங்கள் நிரப்பப்பட்டும் நீங்கள் TET தேர்வில்  110 மதிப்பெண் எடுத்தும் இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் போனதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் weightage முறைதான் காரணம் என்று அனைத்து ஊடகங்களிலும் தவறான செய்தியை பரப்பி பேட்டியளித்து வருகிறீர்கள்.

நீங்கள் பேட்டி அளிக்கும் அதே ஊடகம் நாங்கள் பேட்டியளித்தாலும் அதனை ஒளிபரப்பும் என்பதை மறவாதீர்கள்.பேட்டியளிக்கும் நீங்கள் பேட்டியளிக்கும் முன்பாக உங்களது வகுப்பையும் கூறி பேட்டியளிக்கலாமே!

நீங்கள் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் நீங்கள் OC பிரிவின் கீழ் வருவதுதான்.

என்னுடைய மதிப்பெண் 102. தமிழ்ப்பாடப் பிரிவு.அதுவும் நான் இளங்கலையில் 52% . தமிழில் மொத்த காலிப்பணியிடங்களே 772 தான்.

TET இல் 102, இளங்கலையில் 52% மதிப்பெண்கள் பெற்ற நானே 772 காலிப்பணியிடங்கள் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்கும் பொழுது 2800 காலிப்பணியிடங்கள் கொண்ட அதுவும் TET இல் 110 மதிப்பெண் வாங்கிய உங்களால் இறுதிப்பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல்போனதற்கான உண்மையான காரணம் என்ன?

நான் சொல்லட்டுமா? அதற்கான உண்மையான காரணம் தமிழக அரசு கடைபிடித்து வரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைதான்.

நான் BC பிரிவின் கீழ் வருவதால் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளேன்.நீங்கள் OC பிரிவின் கீழ் வருவதால் என்னை விட அதிக TET மதிப்பெண் பெற்றிருந்தும்,ஆங்கிலத்தில் அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பட்டாலும் உங்களால் இடம் பிடிக்க முடியவில்லை.

நீங்கள் போராடுங்கள் ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் weightage முறைக்கு எதிராக இல்லை.இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக.......

உச்சநீதிமன்றம் அனைத்து இட ஒதுக்கீடுகளையும் 50% க்குள் முடித்து விட என்று உத்தரவிட்டது.ஆனால் தமிழ அரசுதான் அதற்கு எதிராக வாதாடி வெற்றி பெற்று 69% வரை இட ஒதுக்கீட்டின் வரம்பை நிர்ணயித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.

உங்களால் முடிந்தால் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்து போராடி வெற்றி கொள்ளுங்கள்.

முக்கியக் குறிப்பு;

தற்போது 14,700 பேர் கொண்ட இறுதிபட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 28 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 70 % . அதைபற்றி விளக்கமான  தனிப் பதிவு விரைவில் வெளியாகும்.

நன்றி......